நீருந்து குழாய் அகற்றாததால் வாகன நெரிசலில் மக்கள் அவதி

Added : மே 01, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி " பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் அருகே, நீருந்துகுழாய் அகற்றப்படாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் அருகே, ரோடு விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதன் ஒரு கட்டமாக, பஸ் ஸ்டாண்டில் இருந்த சிக்னல் கம்பங்கள்அகற்றப்பட்டு, ரவுண்டானா அமைக்கப்பட்டது.ரவுண்டானா திரும்பும் பகுதியில், நகராட்சி நீருந்து குழாய் அகற்றப்படாமல் அப்படியே

பொள்ளாச்சி " பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் அருகே, நீருந்துகுழாய் அகற்றப்படாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் அருகே, ரோடு விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதன் ஒரு கட்டமாக, பஸ் ஸ்டாண்டில் இருந்த சிக்னல் கம்பங்கள்அகற்றப்பட்டு, ரவுண்டானா அமைக்கப்பட்டது.ரவுண்டானா திரும்பும் பகுதியில், நகராட்சி நீருந்து குழாய் அகற்றப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.பொதுமக்கள் கூறுகையில், 'பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ள நிலையில், ரோடு புதியதாக அமைக்கப்படாமல் உள்ளது.

இதனால், வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.இந்நிலையில், நீருந்துகுழாய் அகற்றப்படாமல் பேரிகார்டு வைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் திரும்பும் போது, குழாய் மீது மோதி விபத்துக்குள்ளாகும் சூழல் நிலவுகிறது.அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, குழாயை மாற்றியமைக்க நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X