பொது செய்தி

தமிழ்நாடு

தொழிலாளர் பற்றாக்குறை சமாளிக்க நவீன இயந்திரத்தில் தேயிலை பறிப்பு

Added : மே 01, 2021
Share
Advertisement
வால்பாறை- தேயிலை எஸ்டேட்களில் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க, நவீன இயந்திரத்தைக் கொண்டு தேயிலை பறிக்கும் பணி நடக்கிறது.வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட்களில், தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. இது தவிர, சிறிய அளவில் காபி, ஏலம், மிளகு போன்ற பயிர்களும் பயிரிடப்பட்டுள்ளன.தயாரிக்கப்படும் தேயிலை துாள், கோவை, கொச்சி, குன்னுார் போன்ற ஏல மையங்களுக்கும், வெளிநாடுகளுக்கும்

வால்பாறை- தேயிலை எஸ்டேட்களில் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க, நவீன இயந்திரத்தைக் கொண்டு தேயிலை பறிக்கும் பணி நடக்கிறது.வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட்களில், தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. இது தவிர, சிறிய அளவில் காபி, ஏலம், மிளகு போன்ற பயிர்களும் பயிரிடப்பட்டுள்ளன.தயாரிக்கப்படும் தேயிலை துாள், கோவை, கொச்சி, குன்னுார் போன்ற ஏல மையங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.இந்நிலையில், தொழிலாளர்களுக்கு விலைவாசிக்கு ஏற்ற சம்பளம் கிடைக்காததால், கடந்த, 2001ம் ஆண்டு முதல், எஸ்டேட்டில் இருந்து வெளியேறி, தொழில்நகரமான திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.இதனிடையே, தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க எஸ்டேட் நிர்வாகங்கள், அசாம், பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, தொழிலாளர்களை அழைத்து வந்து, தேயிலை பறிக்கும் பணியில் அமர்த்தியுள்ளனர்.இந்நிலையில், சமமான தேயிலை காட்டில் பச்சை தேயிலையை நவீன இயந்திரத்தைக்கொண்டு, பறிக்கும் பணி நடக்கிறது. இதனால் குறைவான ஆள்களை கொண்டு அதிக அளவில் தேயிலை பறிக்கும் முடிகிறது.தோட்ட அதிகாரிகள் கூறுகையில், 'தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட நவீன இயந்திரத்தைக் கொண்டு, 30 தொழிலாளர்கள் செய்ய வேண்டிய பணியை, நான்கு தொழிலாளர்கள் செய்கின்றனர். இதனால், தொழிலாளர் பற்றாக்குறையை ஓரளவுக்கு சமாளிக்க முடிகிறது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X