பொது செய்தி

தமிழ்நாடு

வெங்காய சாகுபடியில் செலவு அதிகரிப்பு நிலையான விளைச்சலுக்கு எதிர்பார்ப்பு

Added : மே 01, 2021
Share
Advertisement
உடுமலை - விதை உட்பட இடுபொருட்கள் செலவு பல மடங்கு அதிகரித்துள்ளதால், சின்னவெங்காயத்தில், அதிக விளைச்சல் கிடைக்க, விவசாயிகளிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது.உடுமலை கணக்கம்பாளையம், கண்ணமநாயக்கனுார், குட்டியகவுண்டனுார், குடிமங்கலம், பெரியபட்டி உட்பட பகுதிகளில், கிணற்றுப்பாசனத்துக்கு பரவலாக சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது.நடப்பு சீசனில், விதைப்பின் போது, விதை

உடுமலை - விதை உட்பட இடுபொருட்கள் செலவு பல மடங்கு அதிகரித்துள்ளதால், சின்னவெங்காயத்தில், அதிக விளைச்சல் கிடைக்க, விவசாயிகளிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது.உடுமலை கணக்கம்பாளையம், கண்ணமநாயக்கனுார், குட்டியகவுண்டனுார், குடிமங்கலம், பெரியபட்டி உட்பட பகுதிகளில், கிணற்றுப்பாசனத்துக்கு பரவலாக சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது.நடப்பு சீசனில், விதைப்பின் போது, விதை வெங்காயத்தின் விலை, கிலோ 70 ரூபாய் வரை அதிகரித்து இருந்தது. அடியுரம் இடுதல், களையெடுத்தல், மருந்து தெளித்தல் உட்பட சாகுபடியில், செலவு, ஏக்கருக்கு, 40 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக செலவாகிறது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.சாகுபடியில் தற்போது, களையெடுத்தல் பணி தீவிரமாக நடக்கிறது. வெயிலின் தாக்கத்தால், வெங்காய பயிர்களில், நோய்த்தாக்குதலும் காணப்படுகிறது.விவசாயிகள் கூறியதாவது: சின்னவெங்காய சாகுபடிக்கான செலவு ஒவ்வொரு சீசனிலும், அதிகரித்து வருகிறது. சீசன் சமயங்களில், தோட்டக்கலைத்துறை வாயிலாக, தரமான விதைகளை விற்பனை செய்தால், பயனுள்ளதாக இருக்கும்.கடந்த சீசனில், நல்ல விலை கிடைத்ததால், நடப்பு சீசனுக்கான, விதை வெங்காயத்தின் விலையை உயர்த்தி விட்டனர்.பயிரின் வளர்ச்சி தருணத்தில், கோடை மழை கிடைத்துள்ளது. மழைக்கு பிறகு, களையெடுத்து, உரமிடும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். வெயிலின் தாக்கம் குறைந்தால், பயிரின் வளர்ச்சி சீராக இருக்கும்.ஏக்கருக்கு, 8 முதல், 10 டன் வரைக்கும் விளைச்சல் எதிர்பார்க்கிறோம். அறுவடை சீசனில், விலை கிடைத்தால், நஷ்டத்தை தவிர்க்கலாம்.இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X