பொது செய்தி

தமிழ்நாடு

அனுமதி பெறாமல் கட்டப்பட்ட 4 கடைகளுக்கு 'சீல்'கமிஷன் ஆய்வுக்கு பின் நகராட்சி அதிகாரிகள் அதிரடி

Added : மே 01, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி- பொள்ளாச்சி நகராட்சி திட்ட அனுமதி பெறாமல் கட்டப்பட்ட நான்கு கடைகளுக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.பொள்ளாச்சி மகாலிங்கபுரம் குடியிருப்பு பகுதிகளில், கோர்ட் உத்தரவுப்படி, வணிக வளாக கட்டடங்களை ஆய்வு செய்த நகராட்சி அதிகாரிகள், 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்தாதற்கு 'நோட்டீஸ்' வழங்கியும் நடவடிக்கை இல்லை. மார்ச் மாதம் கடைகளுக்கு 'சீல்' வைக்கும் பணியில்

பொள்ளாச்சி- பொள்ளாச்சி நகராட்சி திட்ட அனுமதி பெறாமல் கட்டப்பட்ட நான்கு கடைகளுக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.பொள்ளாச்சி மகாலிங்கபுரம் குடியிருப்பு பகுதிகளில், கோர்ட் உத்தரவுப்படி, வணிக வளாக கட்டடங்களை ஆய்வு செய்த நகராட்சி அதிகாரிகள், 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்தாதற்கு 'நோட்டீஸ்' வழங்கியும் நடவடிக்கை இல்லை. மார்ச் மாதம் கடைகளுக்கு 'சீல்' வைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.இந்நிலையில், இப்பணிகளை ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நியமிக்கப்பட்ட, அட்வகேட் கமிஷனர் ஆறுமுகம் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.இதையடுத்து, மகாலிங்கபுரம் ரவுண்டானா - பல்லடம் ரோடு செல்லும் ரோடு, பல்லடம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில், நகரமைப்பு அலுவலர் பாலாஜி தலைமையில், நகரமைப்பு ஆய்வாளர்கள் உதயகுமார், வெங்கடேசன், ஜான்சிராணி ஆகியோர் நேற்று ஆய்வு செய்து, கடைகளுக்கு 'சீல்' வைத்தனர்.நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:பொள்ளாச்சி உள்ளூர் திட்ட குழுமம் பகுதியில் அமையும் மகாலிங்கபுரம் மனைப்பிரிவில், குடியிருப்பு பகுதியான காமராஜர் வீதி, நேருவீதி, ரவுண்ட் ரோடு மற்றும் இதர வீதிகளில் உள்ள வணிக உபயோக கட்டடம் கட்டியதில், வாகனம் நிறுத்துமிடம் ஏற்படுத்தாதது மற்றும் திட்ட அனுமதி பெறப்படாத கட்டடங்கள் குறித்து தனிநபர் கிருஷ்ணகுமார், சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கின் தீர்ப்பின் படியும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் படியும் முதற்கட்டமாக மார்ச் மாதம் நான்கு வணிக உபயோக கட்டடங்கள் பூட்டி 'சீல்' வைக்கப்பட்டது.சென்னை உயர்நீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட அட்வகேட் கமிஷனர் ஆறுமுகம் முன்னிலையில், அளவைப்பணி கடந்த, 16ம் தேதி மேற்கொள்ளப்பட்டது.நேருவீதியில் உள்ள குடியிருப்பு பகுதியில், வணிக கட்டடங்கள் கட்ட, நகராட்சி திட்ட அனுமதி பெறாமல் புதியதாக கட்டப்படும் இரண்டு கட்டடங்கள் 'சீல்' வைக்கப்பட்டன. மேலும், ஒரு கடை என மொத்தம், மூன்று கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது.இதேபோன்று பல்லடம் ரோட்டில் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட வணிக உபயோக கட்டடத்துக்கும் 'சீல்' வைக்கப்பட்டது. தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X