பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டில் இருந்தபடியே வழிகாட்டுதல்; ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

Added : மே 01, 2021
Share
Advertisement
உடுமலை : பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி குறித்து, மறு அறிவிப்பு வரும் வரை, ஆசிரியர்கள் வீட்டில் இருந்தபடியே மாணவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை அளிக்க உள்ளனர்.பிளஸ் 2, மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், பொதுத்தேர்வு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நாளை (மே 1ம் தேதி) முதல், ஆசிரியர்கள், பள்ளிக்கு வர வேண்டாம் என,

உடுமலை : பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி குறித்து, மறு அறிவிப்பு வரும் வரை, ஆசிரியர்கள் வீட்டில் இருந்தபடியே மாணவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை அளிக்க உள்ளனர்.

பிளஸ் 2, மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், பொதுத்தேர்வு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நாளை (மே 1ம் தேதி) முதல், ஆசிரியர்கள், பள்ளிக்கு வர வேண்டாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், பொதுத்தேர்வு தேதி குறித்து, மறு அறிவிப்பு வரும் வரை, ஆசிரியர்கள் வீட்டில் இருந்தபடி, மாணவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.க

ல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:ஆசிரியர்கள், இணைப்பு பாடப்புத்தகம் மற்றும் பயிற்சி ஏட்டில் உள்ள பாடங்களை, கல்வி தொலைக்காட்சி வாயிலாக கற்க மாணவர்களை தயார் செய்ய வேண்டும். இதற்காக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம், மொபைல்போன் வாயிலாக 'வாட்ஸ்அப்' மற்றும் பிற டிஜிட்டல் வழிமுறைகளை கையாள அறிவுறுத்த வேண்டும்.

பயிற்சிக்கான விடைத்தாள்களை சரிபார்க்க வேண்டும். தவிர, வரும் கல்வியாண்டுக்கு பள்ளிகளை தயார் செய்வதுடன், அதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ளவும், மாணவர்களுக்கான பயிற்சியை ஆய்வு செய்ய வேண்டும்.மே மாத இறுதி வாரத்தில், ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வருகை புரிய வேண்டிய நிலை ஏற்பட்டால், அதற்கான அறிவிப்பு தனியாக வெளியிடப்படும். இதற்கான சுற்றறிக்கை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X