புலிகள் காப்பகத்தில் குட்டி யானை இறப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புலிகள் காப்பகத்தில் குட்டி யானை இறப்பு

Added : மே 01, 2021
Share
வால்பாறை : ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, வால்பாறை வனச்சரகம், அக்காமலை பிரிவு ஊசிமலையில், மூன்று வயது பெண் குட்டி யானை இறந்தது.தகவல் அறிந்த, உதவி வனப்பாதுகாவலர் செல்வம், வால்பாறை வனச்சரக அலுவலர் ஜெயசந்திரன் ஆகியோர் தலைமையில், யானை ஆராய்ச்சியாளர் கணேஷ், கால்நடை மருத்துவர்கள் சுகுமார், மெய்யரசன் ஆகியோர் முன்னிலையில், இறந்த குட்டி யானை பிரேத பரிசோதனை

வால்பாறை : ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, வால்பாறை வனச்சரகம், அக்காமலை பிரிவு ஊசிமலையில், மூன்று வயது பெண் குட்டி யானை இறந்தது.

தகவல் அறிந்த, உதவி வனப்பாதுகாவலர் செல்வம், வால்பாறை வனச்சரக அலுவலர் ஜெயசந்திரன் ஆகியோர் தலைமையில், யானை ஆராய்ச்சியாளர் கணேஷ், கால்நடை மருத்துவர்கள் சுகுமார், மெய்யரசன் ஆகியோர் முன்னிலையில், இறந்த குட்டி யானை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, வால்பாறையில் இந்த ஆண்டு மட்டும் பல்வேறு காரணங்களால் நான்கு யானைகள் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'இறந்த குட்டி யானை மலைச்சரிவில் நடந்து செல்லும் போது, 200 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்ததில், உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டு இறந்துள்ளது,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X