பொது செய்தி

தமிழ்நாடு

மனைவி சடலத்துடன் தவித்த முதியவருக்கு உதவிக்கரம்

Added : மே 01, 2021
Share
Advertisement
வால்பாறை : வால்பாறை காமராஜ் நகரை சேர்ந்தவர் ரவிசந்திரன். இவரது மனைவி பத்மா, 58. இவர் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் இறந்தார்.அவரது இறுதி சடங்குகள் செய்ய, உறவினர்கள் யாரும் அருகில் இல்லாத நிலையில், முதியவர் செய்வதறியாது, மனைவியின் சடலத்துடன் சோகத்தில் இருந்தார்.தகவல் அறிந்த, வால்பாறை மக்கள் முன்னேற்ற இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள், ஆன்ரோஷ், செல்வக்குமார், ஏசுராஜன்

வால்பாறை : வால்பாறை காமராஜ் நகரை சேர்ந்தவர் ரவிசந்திரன். இவரது மனைவி பத்மா, 58. இவர் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் இறந்தார்.

அவரது இறுதி சடங்குகள் செய்ய, உறவினர்கள் யாரும் அருகில் இல்லாத நிலையில், முதியவர் செய்வதறியாது, மனைவியின் சடலத்துடன் சோகத்தில் இருந்தார்.தகவல் அறிந்த, வால்பாறை மக்கள் முன்னேற்ற இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள், ஆன்ரோஷ், செல்வக்குமார், ஏசுராஜன் உள்ளிடோர், முதியவரின் வீட்டிற்கு சென்று, இறுதி சடங்குகளை முன் நின்று செய்தனர். அதன்பின் ஆம்புலன்ஸில் சடலத்தை மயானத்துக்கு எடுத்துச்சென்று அடக்கம் செய்தனர்.

இளைஞர்களின் இந்த செயலுக்கு, முதியவர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். வால்பாறை மக்கள் முன்னேற்ற இயக்க நிர்வாகிகளின், சமூக சேவை வலைதளங்களிலும், வாட்ஸ்ஆப்பிலும் பகிரப்பட்டு, மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X