அரசியல் செய்தி

தமிழ்நாடு

கருத்து கணிப்புகள் தவிடு பொடியாகும்: மநீம

Updated : மே 01, 2021 | Added : மே 01, 2021 | கருத்துகள் (82)
Share
Advertisement
சென்னை : 'கருத்துக் கணிப்புகள் அனைத்தும் திணிப்புகளே. 234 தொகுதிகளிலும், மக்கள் நீதி மய்யம் அதிர்வலைகளை ஏற்படுத்தும்' என, மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கூறியுள்ளனர்.இது தொடர்பாக, அந்தக் கட்சியின் நிர்வாகிகள் கூறியதாவது: கருத்துக் கணிப்புகள் அனைத்துமே, கருத்து திணிப்புகளே. இதற்கு முன் வெளியான கணிப்புகள் அனைத்தும், தவறானவை என்பதை நாம் அறிவோம். தி.மு.க., - அ.தி.மு.க., என்ற
Kamal, Kamal Haasan, TN election Result, MNM, கமல், கமல்ஹாசன்

சென்னை : 'கருத்துக் கணிப்புகள் அனைத்தும் திணிப்புகளே. 234 தொகுதிகளிலும், மக்கள் நீதி மய்யம் அதிர்வலைகளை ஏற்படுத்தும்' என, மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக, அந்தக் கட்சியின் நிர்வாகிகள் கூறியதாவது: கருத்துக் கணிப்புகள் அனைத்துமே, கருத்து திணிப்புகளே. இதற்கு முன் வெளியான கணிப்புகள் அனைத்தும், தவறானவை என்பதை நாம் அறிவோம். தி.மு.க., - அ.தி.மு.க., என்ற இரு கட்சிகளை மட்டுமே, மாபெரும் சக்திகளாக கட்டமைக்கின்றனர்.


latest tamil news


மகுடிக்கு கட்டுப்பட்டு ஆடும் பாம்பை போல, இரு கழகங்கள் வாரி வழங்கும் பணத்திற்கு கட்டுப்பட்டு கபட நாடகம் ஆடுகின்ற நிறுவனங்களின் சதித் திட்டமும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.நடுநிலை ஊடகங்கள் கூட மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகளுக்கு முக்கியத்துவம் தரவில்லை. இம்முறை தொங்கு சட்டசபை தான் அமையும்.

234 தொகுதிகளிலும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி, இரு கழகங்களின் அஸ்தமனத்திற்கு முடிவுரை எழுதி, தமிழகத்தில் சிறப்பான மாற்றம் காண, மக்கள் நீதி மய்யம் கூட்டணி அதற்கான முன்னெடுப்பை நிகழ்த்தும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (82)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthu - Nagaipattinam,இந்தியா
02-மே-202115:27:37 IST Report Abuse
Muthu ஒரு பிரயோஜனமும் இல்லாத நீ வேஷம் கட்டத்தான் லாயக்கு.. அரசியலில் பூஜ்யம்தான்.... உனக்கு ஒட்டு போட்ட கோவை தெற்கு மக்கள் மிகுந்த வருத்தம் அடைவார்கள்...
Rate this:
Cancel
02-மே-202107:09:31 IST Report Abuse
ramachandran a ஓவரா சவுண்ட் உடுற?இருடி இன்னையோட உன் ஆட்டம் குளோஸ்.‌
Rate this:
Cancel
02-மே-202105:50:18 IST Report Abuse
ravi chandran இந்த டுபாக்கூர் தமிழ்நாட்டின் அதிநவீன வைரஸ்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X