பொது செய்தி

இந்தியா

15 மணி நேரம் கொரோனா கவச உடை; டாக்டரின் புகைப்படம் வைரல்

Updated : மே 01, 2021 | Added : மே 01, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா கவச உடையான பிபிஇ கிட்டை தொடர்ந்து 15 மணி நேரம் அணிந்து கொண்ட டாக்டர் ஷோஹிலின் புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளும்படி, மருத்துவர்கள் தொடர்ந்து பொதுமக்களிடம் கூறி
PPE suit, viral Photo, Doctor

புதுடில்லி: கொரோனா கவச உடையான பிபிஇ கிட்டை தொடர்ந்து 15 மணி நேரம் அணிந்து கொண்ட டாக்டர் ஷோஹிலின் புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளும்படி, மருத்துவர்கள் தொடர்ந்து பொதுமக்களிடம் கூறி வருகின்றனர். கொரோனா அரக்கனை விரட்டும் வாரியர்ஸ்களாக டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து போராடி வருகின்றனர். பல இன்னல்களுக்கு இடையேதான் அவர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், 15 மணி நேரம் தொடர்ந்து கவச உடை அணிந்து கொண்டு பணியாற்றிய டாக்டர் ஒருவரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. டாக்டர் ஷோஹில் பகிர்ந்த புகைப்படத்தை பார்ப்பவர்களுக்கு, டாக்டர்கள் எவ்வளவு இன்னல்களுக்கு இடையே பணியாற்றி வருகின்றனர் என்பது தெரியவரும்,


latest tamil news



கொரோனா வார்டில் டாக்டராக பணியாற்றி வரும் டாக்டரான ஷோஹில், கொரோனா கவச உடையுடன் இருக்கும் தனது புகைப்படத்தையும், கவச உடையை கலட்டிய பின்னர் வியர்வை வழிய, உடை முழுவதும் வேர்வையால் நனைந்திருக்கும் புகைப்படத்தையும் இணைத்து வெளியிட்டார். 'நாட்டிற்காக கடமையாற்றுவதில் நான் பெருமைப்படுகிறேன்' என்ற பதிவுடன் அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Ganesan - Hosur,இந்தியா
01-மே-202117:32:50 IST Report Abuse
S.Ganesan இவர்களுடைய சேவை பாராட்டுக்கு மட்டும் அல்ல போற்றுதலுக்கு உரியது. இப்போதுதான் மருத்துவம் வியபாரத்தில் இருந்து தொண்டு நிலையை அடைந்துள்ளது. இப்படி தொண்டு செய்யும் இவர்கள் நலமுடன் வாழ பிரார்த்திக்கிறேன்
Rate this:
Cancel
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) டாக்குட்டரய்யா உலக சாதனை செய்ததை பாராட்டி நம்ம தொல்லைபதி சுடலை கான் பதவியேற்றவுடன் உங்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சு பதவி வழங்குவார்
Rate this:
Cancel
sivaraman - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
01-மே-202115:14:12 IST Report Abuse
sivaraman கஷ்டமாய் இருந்தால் வேலையை விட்டு விட வேண்டியதுதானே. விளம்பரம் செய்வானேன்
Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
02-மே-202111:12:15 IST Report Abuse
pradeesh parthasarathyஎன்ன செய்வது.... சங்கிகளுடைய ஸ்டைல் தனி ஸ்டைல்.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X