குஜராத் மருத்துவமனையில் தீ: 2 நர்சுகள் உள்பட 18 பேர் பலி

Updated : மே 01, 2021 | Added : மே 01, 2021 | கருத்துகள் (28)
Share
Advertisement
பரூச்: குஜராத் மாநிலம் பரூச் நகரில் உள்ள கொரோனா மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 2 நர்சுகள் உள்பட 18 கொரோனா நோயாளிகள் பலியாகினர்.குஜராத் மாநிலம் பரூச் நகரில் உள்ளது படேல் கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனை. இங்குள்ள ஐசியு பிரிவில் பல கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இன்று அதிகாலை 1 மணியளவில் ஏற்பட்ட தீவிபத்தில் அங்கு சிகிச்சையில் இருந்த 16
gujarat, hospital, fire, 12, toll, குஜராத், தீவிபத்து, மருத்துவமனை, நோயாளிகள், 12 பேர், பலி

பரூச்: குஜராத் மாநிலம் பரூச் நகரில் உள்ள கொரோனா மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 2 நர்சுகள் உள்பட 18 கொரோனா நோயாளிகள் பலியாகினர்.

குஜராத் மாநிலம் பரூச் நகரில் உள்ளது படேல் கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனை. இங்குள்ள ஐசியு பிரிவில் பல கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இன்று அதிகாலை 1 மணியளவில் ஏற்பட்ட தீவிபத்தில் அங்கு சிகிச்சையில் இருந்த 16 நோயாளிகள் தீயில் கருகி பலியாகினர். இந்த விபத்தில் சிக்கி 2 நர்சுகளும் உயிரிழந்தனர்.


latest tamil news



மேலும் பல நோயாளிகள் பலத்த தீக்காயம் அடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என பரூச் நகர எஸ்.பி கூறினார் . தீவிபத்திற்கான காரணம் மின்கசிவு என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மற்ற நோயாளிகள் வேறொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thirumurugan - Kuala Lumpur,மலேஷியா
02-மே-202102:21:03 IST Report Abuse
Thirumurugan ஆழ்ந்த அனுதாபங்கள் அவர்களது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். மதிப்புக்குரிய பிரதமர் அவர்கள் பதவி ஏற்றபொழுது இந்தியாவை குஜராத் போல் முன்னேற்றி காட்டுவோம் என்று சொன்னார்கள். இப்பொழுது அதை நினைத்தால் தலையில் இடியே விழுந்துரும் போல் பயமாக உள்ளது.
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
01-மே-202119:23:51 IST Report Abuse
Rajagopal வெந்த புண்ணில் வேல் பாய்கிறதே
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
01-மே-202117:33:31 IST Report Abuse
Malick Raja உள்ளதை சொன்னால் அரசியல் என்பர் .. மிகைத்து சொன்னால் உண்மை என்பர் .. ஆக உண்மை சொல்ல கூடாது .. குஜராத்தில் பற்றிய தீ உண்மை இல்லை ..சும்மா வைக்கோல் குவியல் எரிந்து விட்டது என்று செய்தி போட்டிருந்தால் விவகாரமே இல்லாம போயிருக்கும் . காலம் தன்கடைமையை செய்யும் ..அல்ல செய்தே தீரும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X