மே. வங்கத்தில் பா.ஜ., ஆட்சி: தலைவர்கள் நம்பிக்கை

Added : மே 01, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
புதுடில்லி: 'மேற்கு வங்கத்தில், அதிக பெரும்பான்மையுடன், பா.ஜ., ஆட்சி அமைக்கும்' என, அக்கட்சி தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபை தேர்தல், கடந்த மாதம், 27ல் துவங்கி, நேற்று முன்தினத்துடன், எட்டு கட்டங்களாக நடந்து முடிந்தது. பதிவான ஓட்டுகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள்
WestBengalElections, BJP, Victory, Confidence, GeneralSecretary, BhupendraYadav, AbsoluteMajority, ElectionResults, மேற்குவங்கம், தேர்தல், பாஜக, வெற்றி, நம்பிக்கை, தேர்தல் முடிவுகள்

புதுடில்லி: 'மேற்கு வங்கத்தில், அதிக பெரும்பான்மையுடன், பா.ஜ., ஆட்சி அமைக்கும்' என, அக்கட்சி தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபை தேர்தல், கடந்த மாதம், 27ல் துவங்கி, நேற்று முன்தினத்துடன், எட்டு கட்டங்களாக நடந்து முடிந்தது. பதிவான ஓட்டுகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை பல்வேறு ஊடகங்கள் நேற்று முன் தினம் வெளியிட்டன. இதில், பா.ஜ., வெற்றி பெறும் என சில ஊடகங்களும், திரிணமுல் காங்., - பா.ஜ., இடையே கடும் போட்டி நிலவும் என்றும், பல்வேறு விதமான கணிப்புகள் வெளியிடப்பட்டன.


latest tamil news



இந்நிலையில், பா.ஜ., பொதுச் செயலர் பூபேந்தர் யாதவ், செய்தியாளர்களிடம் நேற்று கூறுகையில், ''பா.ஜ., மக்களின் நல்லாதரவை பெற்றுள்ளது. எனவே, அதிகப் பெரும்பான்மையுடன், மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைப்போம்,'' என்றார்.பா.ஜ., தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவரும், மேற்கு வங்க துணை பொறுப்பாளருமான அமித் மால்வியா கூறுகையில், ''திரிணமுல் காங்., வெற்றி பெறும் என்ற கருத்துக் கணிப்பு முடிவுகள் நிச்சயம் பொய்யாகும். மேற்கு வங்கத்தில் அடுத்தது பா.ஜ., ஆட்சி தான்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-மே-202119:56:08 IST Report Abuse
ஸ்டாலின் :: மேற்கு வங்காள முதல்வர் அவரது ஆட்சிக்காலத்திலேயே மத்திய ஆட்சியாளர்களால் மிக அவமதிக்கப்பட்டார். ஒரு தனி பெண்ணாக அனைத்தையும் அமைதியாக சகித்துக்கொண்டார். இந்த காரணம் ஒன்றே அவர் மீண்டும் முதல்வராக வர இறைவன் சித்தம் கொண்டுள்ளார் என்றே உண்மை காரணம். ஒரு மாநிலத்தில் மக்களால் முறையாக தேர்வு செய்யப்பட்டவரை ரெண்டு மேமாதம் அவர் வீட்டுக்கு செல்வார், தனிமரமாவார் என்றெல்லாம் விமர்சித்தார்கள் மத்திய ஆட்சியாளர்கள். எனவே இறைவன் அவரது பொறுமைக்கு பரிசாக மீண்டும் ஒரு முறை ஆட்சி தருகின்றார் என்றே மக்கள் நம்புகின்றார்கள்.
Rate this:
Cancel
தி.மு.க.,வின் இதய உதயசூரியன் உதயமாகிறது. - DMK வெற்றிக்கு பாடுபட்டோருக்கு நன்றி ,இந்தியா
01-மே-202119:54:59 IST Report Abuse
 தி.மு.க.,வின் இதய உதயசூரியன் உதயமாகிறது. ////பிஜேபி வாங்க மாநிலத்தில் பெரும் முத்திரை பதித்து விட்டது/// தரையில் கால் படாதவாறு, மம்தா வளர்த்து விட்ட தலைவர்கள் தோள்களில் நிற்கிறது. ////முதல்வர் வேட்பாளர் அறிவிக்கமுடியாத சூழ்நிலை//// அறிவித்திருந்தால் தெரிந்திருக்கும், எத்தனை பேர் நின்றிருப்பார்கள், எத்தனை பேர் திரும்பியிருப்பார்கள் என்று. மம்தா ஆட்சி அமைக்கும்போது தெரியும் தோள்களில் நிற்பார்களா அல்லது தரையில் வீழ்வார்களா என்று.
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
01-மே-202119:22:25 IST Report Abuse
Rajagopal பாஜக ஆட்சி அமைய வழியில்லை. முந்தைய தேர்தல்களை விட அதிகம் இடங்களில் வெற்றி பெற்று, பிரதான எதிர் கட்சியாக வர வாய்ப்புள்ளது. அடுத்த தேர்தல் வரை காத்திருக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X