பொது செய்தி

இந்தியா

"இத்தனை வயதாகியும் பக்குவமே இல்லாமல் இருந்தால் உங்க கட்சி கூட உங்களை ஓரம் கட்டி விடும்..."

Updated : மே 01, 2021 | Added : மே 01, 2021 | கருத்துகள் (54)
Share
Advertisement
தொலைநோக்குடன் நேரு உருவாக்கிய, 'எய்ம்ஸ்' மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவை, ஆக்சிஜன் இல்லாமல் மூடியது தான் மோடி அரசின் சாதனை. ஆட்சி என்பது அதிகாரம் மட்டுமல்ல. மக்கள் மீதான அக்கறை, தொலைநோக்கு, ஆளுமைத்திறன். இது எதுவுமில்லாத கொடுங்கரங்களில் சிக்கி, இந்தியா சீரழிகிறது.- கரூர் காங்., - எம்.பி., ஜோதிமணி'ஆக்சிஜன் தேவை அதிகரித்ததன் காரணம் என்ன... கொரோனாவை தவிர்க்க
பேச்சு_பேட்டி_அறிக்கை, காங்கிரஸ், ஜோதிமணி

தொலைநோக்குடன் நேரு உருவாக்கிய, 'எய்ம்ஸ்' மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவை, ஆக்சிஜன் இல்லாமல் மூடியது தான் மோடி அரசின் சாதனை. ஆட்சி என்பது அதிகாரம் மட்டுமல்ல. மக்கள் மீதான அக்கறை, தொலைநோக்கு, ஆளுமைத்திறன். இது எதுவுமில்லாத கொடுங்கரங்களில் சிக்கி, இந்தியா சீரழிகிறது.
- கரூர் காங்., - எம்.பி., ஜோதிமணி


'ஆக்சிஜன் தேவை அதிகரித்ததன் காரணம் என்ன... கொரோனாவை தவிர்க்க மக்கள் முன்னெச்சரிக்கையாய் இல்லாமல் இருந்தது தானே... இத்தனை வயதாகியும், சிந்தனையில் பக்குவமே இல்லாமல் இருந்தால், வருங்காலங்களில் உங்க கட்சி தலைமை கூட, உங்களை ஓரங்கட்டி விடும்...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், கரூர் காங்., - எம்.பி., ஜோதிமணி அறிக்கை



கொரோனாவால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மீண்டும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சி.ஐ.டி.யு., மாநில தலைவர் சவுந்தரராஜன்


'இது வாஸ்தவமான பேச்சு... இதை விட்டுட்டு, கூட்டணி தலைமை உயிரோடு இருந்தபோது, தேர்தலில் வெற்றி பெற இலவசம் அறிவிச்சப்ப, வாய் மூடி மவுனம் காத்தது நியாயமே இல்லை...' என, நினைவுபடுத்த துாண்டும் வகையில், சி.ஐ.டி.யு., மாநில தலைவர் சவுந்தரராஜன் அறிக்கை



latest tamil news


கொரோனா பற்றி, 'பேனிக்' எனப்படும் பதற்றம் அடைய வேண்டாம் என, மத்திய, பா.ஜ., அரசு, மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. அப்போ, 'பிக்னிக்' போகலாமா?
- காங்., முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம்


'உங்க கட்சி கரூர் எம்.பி., ஜோதிமணி லெவலையும் தாண்டி, நீங்க ரொம்ப கீழே இறங்குறீங்களே... இந்த, 75 வயசுல, உங்களுக்கு, 'பிக்னிக்' தேவைப்படுதோ...' என கிண்டலடிக்கத் தோன்றும் வகையில், காங்., முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் அறிக்கை



தமிழகத்தில், கடந்த, 10 ஆண்டுகளாக, ஊரக வேலை வாய்ப்பு திட்டம் சிதைக்கப்பட்டு விட்டது. பயனாளிகளுக்கு அற்ப சொற்ப நாட்களே வேலை வழங்கப்பட்டுள்ளது. அதுவும், தேர்தலுக்கு முன் நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது, 55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வேலை மறுக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டுள்ளோருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
- விவசாய தொழிலாளர் சங்க மாநில தலைவர் லாசர்


'சங்கம் அமைச்சு, அதில் தலைவர் பதவியையும் வாங்கிட்டு, அந்தச் சலுகைகளை அனுபவிக்க தான் பலரும் ஆளாய் பறக்குறாங்க... மத்தபடி, வேலையை ஒழுங்கா செய்யணும்ங்கிற நேர்மை யாரிடமும் இல்லைங்கிற குற்றச்சாட்டு இருக்கே... அது பத்தி உங்க கருத்து என்ன...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், விவசாய தொழிலாளர் சங்க மாநில தலைவர் லாசர் அறிக்கை



தேர்தலில் நடிகர் கமல் வெல்வது உறுதி. அவர் தோல்வி அடைய வேண்டும் என்பதற்காக, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது. அவரை பணத்தால் அடித்தாலும், படையால் அடித்தாலும் வெற்றி பெறுவது அவர் மட்டுமே.
- ம.நீ.ம கட்சியின் வேட்பாளர் சினேகன்


'மதி மயக்கம் ஓயட்டும்... மனதில் நீதி பிறக்கட்டும்...' என, கமல் மொழியிலேயே சொல்லத் தோன்றும் வகையில், நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரும் பாடலாசிரியருமான சினேகன் பேட்டி

Advertisement




வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Jakarta,இந்தோனேசியா
06-மே-202115:05:39 IST Report Abuse
Sridhar AIIMS மூடப்பட்டதாக வந்த செய்தியே பொய் என்று தெரிந்தபிறகும், அதையே திரும்ப திரும்ப பொறுப்பற்றமுறையில் சொல்லிக்கொண்டிருப்பவர்கள், மக்கள் பிரதிநிதிகளாக இருக்கவே லாயக்கற்றவர்கள். ஆனால், இப்போதிருக்கும் பல பிரச்சனைகளுக்கு மூல காரணமே மக்கள் தானே? ஆகவே, மக்கள் திருந்தும் வரை இந்த மாதிரி ஆட்கள் தான் அவர்கள் பிரதிநிதியாக இருப்பார்கள்.
Rate this:
Cancel
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
06-மே-202100:08:33 IST Report Abuse
naadodi Modi government should have anticipated the drastic nature of the pandemic and administered the vaccines to the mass before exporting. Just for comparison, President Biden took the initiative and ensured the vaccine distribution. Nearly 1.5 to 2.0 million per day were administered. As a consequence, more than 40% of folks over 18 years of age got vaccinated and infection rates plummeted. That level of task force is visibly absent at India.
Rate this:
Sridhar - Jakarta,இந்தோனேசியா
06-மே-202116:23:20 IST Report Abuse
Sridharஇந்தியா இதுவரை 16 கோடிபேருக்கு மேல் வாக்சின் கொடுத்திருக்கிறது. வாக்சிங் ஏற்றுமதி ஒப்பந்த அடிப்படையிலும் UN போன்ற அமைப்புகளுடன் உள்ள ஏற்பாடுகளினாலும் தான் செய்யப்பட்டது. வெளிநாட்டவர் தொழில்நுட்பத்துடனும் அவர்களிடமிருந்து வரும் மூலப்பொருட்களை பயன்படுத்தி செய்யப்படும் வாக்சின்கள் நிச்சயமாக பகிர்ந்தளிக்கப்படவேண்டிய நிர்பந்தத்தில்தான் இருக்கும். இதெல்லாம் தவிர, உலகம் முழுவதும் உள்ள 'வாக்சின் வல்லுநர்கள்' ஜூலை 21 கு முன் தடுப்பூசி வருவதற்கு சாத்தியமே இல்லை என கூறிவந்த நிலையில், பார்மா கம்பெனிகளின் போட்டியால் அவசர கோலத்தில் அவை வெளியாகின. ஆகவே, எதோ தடுப்பூசி முன்பே இருந்தது போலவும் இந்தியா அதை வைத்துக்கொண்டு போடாமல் இருந்தது போலவும் பேசுவது அறிவுபூர்வமானதல்ல. வளர்ந்த நாடுகள் இந்தியா இறக்குமதி செய்யவேண்டியிருக்கும் என ரதிர்பார்த்தநிலையில், ஆசிரியப்படுத்தும் வகையில் இந்தியா சொந்தமாக வாக்சின் தயாரிக்க முடிந்ததே ஒரு மிகப்பெரிய சாதனை. மேலும் இப்போதுள்ள நிலையில், இன்னும் ஒரு சில மாதங்களில் வாக்சின் உற்பத்தி பெருகி, இந்த வருட கடைசிக்குள் இந்திய மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் சாத்தியக்கூறுகள் ப்ரகாசமாகவே இருக்கும் நிலையில், வர்த்தக நோக்கோடு நோயைக்கூட அணுகும் USA போன்ற நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிட்டு பேசுவதே வன்மையாக கண்டிக்கத்தக்கது....
Rate this:
Cancel
Inclusion - PRINCETON,யுனைடெட் கிங்டம்
05-மே-202120:09:51 IST Report Abuse
Inclusion - Govt should have planned and anticipated 2nd wave - Don't just blame citizen of the country rather look into why this Govt has failed.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X