இந்தியாவில் இருந்து நாடு திரும்ப ஆஸ்திரேலியர்களுக்கு தடை: மீறினால் 5 ஆண்டு சிறை

Updated : மே 01, 2021 | Added : மே 01, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
சிட்னி: 'இந்தியாவில் இருக்கும் ஆஸ்திரேலியர்கள், தங்கள் நாட்டுக்கு திரும்பி வருவது குற்றம்' என, அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் இருக்கிறார்கள். அவர்களில், '600 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய சூழலில் இருக்கிறார்கள்' என, ஆஸ்திரேலியாவின் சுகாதார அமைச்சகம் கணித்துள்ளது. இதையடுத்து இந்தியாவில்

சிட்னி: 'இந்தியாவில் இருக்கும் ஆஸ்திரேலியர்கள், தங்கள் நாட்டுக்கு திரும்பி வருவது குற்றம்' என, அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.latest tamil news


இந்தியாவில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் இருக்கிறார்கள். அவர்களில், '600 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய சூழலில் இருக்கிறார்கள்' என, ஆஸ்திரேலியாவின் சுகாதார அமைச்சகம் கணித்துள்ளது. இதையடுத்து இந்தியாவில் இருந்து வரும் அனைத்து விமானங்களுக்கும் தடை விதித்தது ஆஸ்திரேலியா அரசு.
இந்நிலையில், 'இந்தியாவில் இருக்கும் ஆஸ்திரேலியர்கள், தங்கள் நாட்டுக்கு திரும்பி வருவது குற்றம்' என, அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. மேலும், தடை மீறி நாடு திரும்புவோருக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ.38 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் எனவும், இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் விகிதத்தை அடிப்படையாக கொண்டு இந்த சட்டம் போடப்பட்டுள்ளதாகவும் ஆஸ்திரேலியாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


latest tamil news


ஆஸ்திரேலிய அரசின் இந்த நடவடிக்கைக்கு பெரும் எதிர்ப்புக் கிளம்பி வருகிறது. 'மீட்கப்படுவதற்கு வழி இல்லாமல் இந்தியாவில் நமது குடும்பங்கள் செத்துக்கொண்டிருக்கின்றன. இந்தியாவில் இருந்து திரும்பி வருகிறவர்களால் ஏற்படும் ஆபத்தின் அளவைக் காட்டிலும், அதிதீவிரமான நடவடிக்கையாக இது உள்ளது. இது நம் மக்களை நாமே கைவிடும் செயலாகும். இந்தச் சட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்' என, பல்வேறு தரப்பினரும் கோரி வருகின்றனர். மே 15ம் தேதி வரை இந்தச் சட்டம் அமலில் இருக்கும். அதன் பின் இந்தச் சட்டம் குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என, ஆஸ்திரேலியா அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
02-மே-202105:38:29 IST Report Abuse
மலரின் மகள் இது போன்று அரசுகள் செய்வதால் சில தனியார் நிறுவனங்கள் குறிப்பாக டிராவல் ஏஜெண்ட்களின் சேவையை நாட வேண்டி வருகிறது. அவர்கள் கூடுதல் லாபத்திற்கு எப்படியாவது வழியை கண்டு பிடித்து விடுகிறார்கள். இந்தியாவிலிருந்து திரும்பினால் தானே குற்றம். ஆகையால் இந்தியாவிலிருந்து வேறு நாடுகளுக்கு சென்று அங்கு குறிப்பிட்ட காலம் வரையில் இருந்து விட்டு அதன் பிறகு தாயகம் திரும்பி கொள்ளவேண்டியது தான் அவர்கள். கொரநா அதிகம் பாதித்த தேசத்திலிருந்து யாரும் தங்கள் நாட்டிற்கு வரக்கூடாது என்றும் அந்த தேசத்திற்கு யாரும் செல்லக்கூடாது என்றும் தடைவிதிக்கிறார்கள் சிலபல தேசங்கள். ஆகையால் வேறு சில பிரச்சினை தராத சிறு தேசங்களில் இரண்டு வார காலம் தங்கியிருந்துவிட்டு அதன் பிறகு தாயகம் திரும்புவது ஒரு வகையாக இருக்கிறது. முதலாம் இரண்டாம் உலக போர்களில் தேசம் கடப்பதற்கு மக்கள் பட்ட கஷ்டங்கள் இப்போது தெரிகிறது. இந்திய போன்ற ஜனநாயக மற்றும் கருணை தேசங்கள் தனி விமானம் அமைத்து தங்களது குடிமக்களை அழைத்து கொண்டு வந்தன.
Rate this:
Cancel
Kannan - Bangalore,இந்தியா
01-மே-202118:20:45 IST Report Abuse
Kannan உலகத்தில் எல்லா நாட்டுகாரனும் சுயநலவாதிகள் தான். இந்தியாவில் மட்டும் தான் வாசுதேவ குடும்பகம் என்று சொல்கிறோம். இங்கிருக்கும் ஆஸ்திரேலியர்களையும் எல்லாம் சரியாகிய பிறகு பாத்திரமாக அனுப்பி வைப்போம். All stay safe.
Rate this:
Cancel
மன்னிப்பு - Madurai,இந்தியா
01-மே-202116:39:04 IST Report Abuse
மன்னிப்பு சொந்த நாட்டு மக்களையே உள்ளே வரக்கூடாது என்று சொல்லும் ஒரு நாடு மிகச் சிறந்தது,ஆனால் அந்நிய நாட்டில் துன்பப்படும் நம் மக்களுக்கு குடிஉரிமையை அளித்தால் அதை எதிர்க்க இங்கு ஒரு கூட்டமே உள்ளது. சில வாரங்களிலே 99 சதவீத பழங்குடியினரை மதத்தின் பெயரால் கொன்று குவித்த ஆஸ்திரேலியா சிறந்த நாடா? ஐரோப்பாவின் கிரிமினல்களை குடியேறச்செய்து உருவான ஒரு நாடு தான் ஆஸ்திரேலியா.அவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும். வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X