மதிப்பு வாய்ந்த இன்சூரன்ஸ் நிறுவனங்கள்: உலகில் 10வது இடத்தில் எல்.ஐ.சி.,| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மதிப்பு வாய்ந்த இன்சூரன்ஸ் நிறுவனங்கள்: உலகில் 10வது இடத்தில் எல்.ஐ.சி.,

Updated : மே 01, 2021 | Added : மே 01, 2021 | கருத்துகள் (15)
Share
புதுடில்லி: உலகின் மதிப்பு வாய்ந்த, 10 இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பட்டியலில், எல்.ஐ.சி., இடம்பெற்றுள்ளது. உலகளவில், வலுவான இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பட்டியலில், மூன்றாவது இடத்தையும், பிராண்டு மதிப்பின் அடிப்படையில், 10வது இடத்தையும் எல்.ஐ.சி., பெற்றுள்ளது.லண்டனைச் சேர்ந்த, பிராண்டு மதிப்பு ஆலோசனை நிறுவனமான, 'பிராண்டு பைனான்ஸ்', நடப்பு ஆண்டுக்கான, 100 இன்சூரன்ஸ் நிறுவனங்கள்
LIC, MostValuable, InsuranceBrand, Globally, TenthPlace, எல்ஐசி, மதிப்பு வாய்ந்த, இன்ஸ்சூரன்ஸ் நிறுவனம்

புதுடில்லி: உலகின் மதிப்பு வாய்ந்த, 10 இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பட்டியலில், எல்.ஐ.சி., இடம்பெற்றுள்ளது. உலகளவில், வலுவான இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பட்டியலில், மூன்றாவது இடத்தையும், பிராண்டு மதிப்பின் அடிப்படையில், 10வது இடத்தையும் எல்.ஐ.சி., பெற்றுள்ளது.

லண்டனைச் சேர்ந்த, பிராண்டு மதிப்பு ஆலோசனை நிறுவனமான, 'பிராண்டு பைனான்ஸ்', நடப்பு ஆண்டுக்கான, 100 இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது.இதில், உலகளவில் மதிப்பு மிக்க காப்பீட்டு நிறுவனங்கள் பட்டியலில், 5 சீன நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இதில், சீனாவைச் சேர்ந்த, 'பிங் ஆன்' இன்சூரன்ஸ் நிறுவனம், உலகளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.


latest tamil news



இருப்பினும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இதன் பிராண்டு மதிப்பு, 26 சதவீதம் சரிந்துள்ளது. அதேசமயம், எல்.ஐ.சி.,யின் பிராண்டு மதிப்பு, 7 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த பட்டியலில், அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியாவிலிருந்து தலா ஒரு நிறுவனம் இடம்பெற்று உள்ளன.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X