பொது செய்தி

தமிழ்நாடு

வெளி மாநில தொழிலாளர்களுக்கு உதவ மையம்

Added : மே 01, 2021
Share
Advertisement
ஈரோடு: தற்போது கொரோனா இரண்டாம் அலையில், மீண்டும் பொது முடக்க நிலை ஏற்படலாம் என்பதால், ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியும், வெளி மாநில தொழிலாளர்கள், சொந்த ஊர்களுக்கு செல்ல முனைப்பு காட்டுகின்றனர். இதற்காக ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் தினமும், 500 பேருக்கு மேல், முன்பதிவு செய்ய குவிகின்றனர். தற்போது முன் பதிவின்றி ரயிலில் பயணம் செய்ய முடியாது. இதனால் எழுத, படிக்க தெரியாத

ஈரோடு: தற்போது கொரோனா இரண்டாம் அலையில், மீண்டும் பொது முடக்க நிலை ஏற்படலாம் என்பதால், ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியும், வெளி மாநில தொழிலாளர்கள், சொந்த ஊர்களுக்கு செல்ல முனைப்பு காட்டுகின்றனர். இதற்காக ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் தினமும், 500 பேருக்கு மேல், முன்பதிவு செய்ய குவிகின்றனர். தற்போது முன் பதிவின்றி ரயிலில் பயணம் செய்ய முடியாது. இதனால் எழுத, படிக்க தெரியாத தொழிலாளர்கள், முன்பதிவு செய்ய முடியாமல் தடுமாறுகின்றனர். இவர்களுக்கு உதவுவதற்காக, ரீடு தொண்டு நிறுவனம், ரயில்வே நிர்வாகத்துடன் இணைந்து, புலம் பெயர் தொழிலாளர் உதவி மையத்தை துவக்கி உள்ளது. இந்த மையத்தில், ஹிந்தியில் பேச, படிக்க, எழுத தெரிந்த மூன்று தன்னார்வலர் உள்ளனர். இவர்கள் வடமாநில தொழிலாளர்களுக்கு படிவங்களை பூர்த்தி செய்து கொடுத்தல், முன்பதிவு செய்தல், ரயில் வரும் நேரத்தை அறிவித்தல், தேவையான பாதுகாப்பு உதவிகளை செய்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X