பொது செய்தி

தமிழ்நாடு

சுங்கச்சாவடிகளை தவிர்க்கும் கனரக வாகனங்களால் பெருந்துயரமான சென்னிமலை-காங்கேயம் சாலை

Added : மே 01, 2021
Share
Advertisement
சென்னிமலை: சுங்கச்சாவடிகளுக்கு பணம் கட்டுவதை தவிர்க்க, சென்னிமலை - காங்கேயம் சாலையில் அணிவகுத்து செல்லும் லாரிகளால், காலை, மாலையில் சென்னிமலை நகரவாசிகள் கடும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர்.சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலை வழியாக பொள்ளாச்சி, கேரளா செல்லும் பெரும்பாலான லாரிகள், பெருந்துறையில் இருந்து சென்னிமலை வழியாக செல்ல ஆரம்பித்து விட்டன. இதற்கு காரணம், தேசிய நெடுஞ்சாலை

சென்னிமலை: சுங்கச்சாவடிகளுக்கு பணம் கட்டுவதை தவிர்க்க, சென்னிமலை - காங்கேயம் சாலையில் அணிவகுத்து செல்லும் லாரிகளால், காலை, மாலையில் சென்னிமலை நகரவாசிகள் கடும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர்.


சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலை வழியாக பொள்ளாச்சி, கேரளா செல்லும் பெரும்பாலான லாரிகள், பெருந்துறையில் இருந்து சென்னிமலை வழியாக செல்ல ஆரம்பித்து விட்டன. இதற்கு காரணம், தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றால் விஜயமங்கலம், கருமத்தம்பட்டி உள்பட மூன்று இடங்களில், சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்த வேண்டும். இதை தவிர்க்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகள் ஈங்கூர், சென்னிமலை, காங்கேயம் வழியாக பொள்ளாச்சி மற்றும் கேரளாவுக்கு செல்கின்றன. அங்கிருந்து வரும் லாரிகளும் இதே வழியில் வருகின்றன. இதனால் சென்னிமலை - பெருந்துறை சாலை, சென்னிமலை - காங்கேயம் சாலை, குறுகிய சாலையாக உள்ள சென்னிமலை டவுன், போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளது. இவ்வழியாக நூற்றுக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், தொழிலாளர்கள் செல்கின்றனர். அணிவகுத்து செல்லும் லாரிகளால், பயத்துடனே சென்று பயத்துடனே வீடு திரும்புகின்றனர். கன்டெய்னர்கள் லாரிகளும் கணக்கின்றி செல்வதால், சாலைகள் விரைவில் சேதமாகி, நடந்து செல்வதே சவாலாக மாறியுள்ளதாக, மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறுகலான சாலையான சென்னிமலை கிழக்கு ராஜா வீதி, சென்னிமலைபாளையம் பிரிவு, விபத்து பகுதியாக மாறியுள்ளது. சுங்கச்சாவடிகளுக்கு பயந்து குறுக்கு வழியில் செல்லும் லாரிகளால், சென்னிமலை மக்களுக்கு பெரிய இடையூறு ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது உயிரிழப்பும் ஏற்படுகிறது. சென்னிமலை போக்குவரத்து போலீசார் மனது வைத்தால், இதற்கு தீர்வு காண முடியும். இதற்கு காலை, மாலை வேளையில், சென்னிமலை டவுனுக்குள் கனரக லாரிகள் நுழைய தடை விதிக்க வேண்டும் என்றும், வாகன ஓட்டிகள், மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இடையூறுக்கு வாய்ப்பான ஈங்கூர் ரயில்வே மேம்பாலம்: சென்னிமலை - பெருந்துறை சாலையில் உள்ள ஈங்கூரில், 11 ஆண்டுகளுக்கு முன், ரயில்வே மேம்பாலம் செயல்பாட்டுக்கு வந்தது. பாலம் கட்டும் முன், ரயில்வே கேட் போடப்படும். இதனால் மக்கள் வெகுநேரம் காத்திருந்தனர். மேம்பாலம் கட்ட பொதுநல அமைப்பினர், மக்கள் போராடினர். இதையடுத்து, 2005ல் தொடங்கிய பணி, 20??ல் முடிந்து பாலம் பயன்பாட்டுக்கு வந்தது. இதனால் ரயில்வே கேட் பிரச்னை மறந்து, மக்கள், வாகன ஓட்டிகள் பயணித்தனர். அந்த பாலமே, டிமிக்கி தரும் கனரக வாகன ஓட்டிகளுக்கு வசதியாகி விட்டது. 'வாளு போய் கத்தி வந்த கதை'யாகி விட்டதாக, சென்னிமலை வாசிகள் புலம்பல் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X