பொது செய்தி

தமிழ்நாடு

சாவிலும் இணைபிரியா தம்பதி; மனைவி இறந்த அதிர்ச்சியில் ஓய்வு பள்ளி ஆசிரியர் மரணம்

Added : மே 01, 2021
Share
Advertisement
அம்மாபேட்டை: அம்மாபேட்டை அருகே, மனைவி இறந்த சோகம் தாளாமல், கணவர் இறந்தார்.அம்மாபேட்டை அருகேயுள்ள குருவரெட்டியூரை சேர்ந்தவர் குழந்தையப்பன், 78, ஓய்வு பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியர். இவரின் மனைவி சம்பூர்ணம், 68; இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இரண்டு மகன், பேரன், பேத்திகளுடன் இணைபிரியா தம்பதியாக வாழ்ந்தனர். இந்நிலையில் உடல் நலக்குறைவால், சம்பூர்ணம் நேற்று

அம்மாபேட்டை: அம்மாபேட்டை அருகே, மனைவி இறந்த சோகம் தாளாமல், கணவர் இறந்தார்.


அம்மாபேட்டை அருகேயுள்ள குருவரெட்டியூரை சேர்ந்தவர் குழந்தையப்பன், 78, ஓய்வு பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியர். இவரின் மனைவி சம்பூர்ணம், 68; இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இரண்டு மகன், பேரன், பேத்திகளுடன் இணைபிரியா தம்பதியாக வாழ்ந்தனர். இந்நிலையில் உடல் நலக்குறைவால், சம்பூர்ணம் நேற்று முன்தினம் மாலை இறந்தார். இதனால் குழந்தையப்பன் சொல்லொணா துயரத்தில் மூழ்கினார். தாள முடியாத வேதனையில் இருந்த அவர், அன்றிரவே மாரடைப்பால் இறந்தார். அதாவது மனைவி இறந்த சில மணி நேரத்தில் இறந்து விட்டார். காதலித்து கரம் பிடித்த, உதாரண தம்பதியராக வாழ்ந்த இருவரும், மரணத்திலும் பிரியாதது, அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. இருவரின் உடல்களும், குருவரெட்டியூர் சுடுகாட்டில் புதைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X