பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி போட்டுக்கொள்ள குவியும் மக்கள்: கூடுதல் இடங்கள் ஏற்படுத்த எதிர்பார்ப்பு

Added : மே 01, 2021
Share
Advertisement
ஈரோடு: அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள, மக்கள் குவிகின்றனர்.ஈரோடு மாவட்டத்தில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி பயன்பாட்டில் உள்ளது. மார்ச், 1 முதல், 80 வயதுக்கு மேற்பட்டோர், இதையடுத்து, 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் பாதித்தோர் தடுப்பூசி போடலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஏப்.,1 முதல், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட

ஈரோடு: அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள, மக்கள் குவிகின்றனர்.


ஈரோடு மாவட்டத்தில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி பயன்பாட்டில் உள்ளது. மார்ச், 1 முதல், 80 வயதுக்கு மேற்பட்டோர், இதையடுத்து, 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் பாதித்தோர் தடுப்பூசி போடலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஏப்.,1 முதல், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட அழைப்பு விடுக்கப்பட்டது. இதன்படி, மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை, ஒரு லட்சத்து, 22 ஆயிரத்து, 591 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், 28 நாள் முதல், 35வது நாளுக்குள் இரண்டாம் தடுப்பூசி போடுகின்றனர். ஈரோடு அரசு மருத்துவமனையில் முதல் தடுப்பூசி போட, 150க்கும் மேற்பட்டோரும், இரண்டாம் தடுப்பூசி போட்டுக் கொள்ள தினமும், 200க்கும் மேற்பட்டோரும் தினமும் வருகின்றனர். ஆன்லைனில் பதிவு செய்தாலும், நேரில் உறுதி செய்கின்றனர். பின், டோக்கன் பெற்று, வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டு செல்கின்றனர். மாவட்ட அளவில் தினமும், 3,000 பேருக்கு மேல் தடுப்பூசி போடுகின்றனர். இதனால் கூடுதல் இடங்களில் தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்ய, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X