அத்தியாவசிய பொருள் வாகனங்களுக்கு வனச்சாலையில் நுழைவு கட்டணம் ரத்து| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அத்தியாவசிய பொருள் வாகனங்களுக்கு வனச்சாலையில் நுழைவு கட்டணம் ரத்து

Added : மே 01, 2021
Share
புன்செய்புளியம்பட்டி: திம்பம் சோதனைச்சாவடி வழியாக, தலமலை வனச்சாலையில் செல்லும் வாகனங்களுக்கு, நுழைவு கட்டணம், தற்காலிகமாக வசூலிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தாளவாடி மலைக்கு, சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் புளிஞ்சூர் சோதனைச்சாவடி வழியாக, அரசு மற்றும் தனியார் பஸ்கள், சரக்கு வாகன போக்குவரத்து நடக்கிறது. கர்நாடகா மாநிலத்தில் கடந்த, 28ம் தேதி முதல்,

புன்செய்புளியம்பட்டி: திம்பம் சோதனைச்சாவடி வழியாக, தலமலை வனச்சாலையில் செல்லும் வாகனங்களுக்கு, நுழைவு கட்டணம், தற்காலிகமாக வசூலிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


தாளவாடி மலைக்கு, சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் புளிஞ்சூர் சோதனைச்சாவடி வழியாக, அரசு மற்றும் தனியார் பஸ்கள், சரக்கு வாகன போக்குவரத்து நடக்கிறது. கர்நாடகா மாநிலத்தில் கடந்த, 28ம் தேதி முதல், முழு ஊரடங்கு அமலில் உள்ளதால், பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் புளிஞ்சூர் சோதனைச்சாவடி வழியாக, வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அதேசமயம், தாளவாடி மலைப்பகுதிக்கு, கர்நாடக மாநிலம் வழியாக பயணிக்க வேண்டிய சூழலில் உள்ள வாகனங்கள், திம்பம் மலைப்பாதையில் இருந்து அடர்ந்த வனப்பகுதியில் உள்ள, தலமலை வனச்சாலை வழியாக செல்கின்றன. திம்பம் சோதனைச்சாவடியில், வனத்துறையினர் நுழைவு கட்டணம் வசூலிப்பது வழக்கம். காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களுக்கும் வசூலிக்கின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இ.கம்யூ., முன்னாள் எம்.எல்.ஏ., சுந்தரம் தலைமையில், 30க்கும் மேற்பட்டோர், சோதனைச்சாவடிக்கு நேற்று சென்றனர். பணியிலிருந்த தலமலை ரேஞ்சர் சுரேஷிடம் கோரிக்கை விடுத்தனர். 'கொரோனா தொற்றால், மாற்றுப்பாதையாக பயன்படுத்துகிறோம். இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்க கூடாது. மீறி வசூலித்தால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம்' என்றனர். இதையடுத்து சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலர் கிருபா சங்கரிடம், வனத்துறை அதிகாரிகள் ஆலோசித்தனர். இதை ஏற்றுக்கொண்ட அவர், ''அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்களுக்கு, தற்காலிகமாக நுழைவு கட்டணம் வசூலிக்க மாட்டோம்,'' என்று கூறவே, அனைவரும் திரும்பி சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X