பொது செய்தி

தமிழ்நாடு

128 வேட்பாளர்களில் மகுடம் சூடும் 8 பேர் யார்?

Added : மே 01, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தின், எட்டு தொகுதி எம்.எல்.ஏ.,க்கள் யார்? என்பது நாளை தெரிந்து விடும். சட்டசபை தேர்தல் பிப்.,26ல் அறிவிக்கப்பட்டு, மார்ச், 12ல் மனுத்தாக்கல் துவங்கி, 19ல் முடிந்தது. ஏப்., 6ல் தேர்தல் நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் எட்டு தொகுதியில், 76.91 சதவீத ஓட்டு பதிவானது. இந்நிலையில் நாளை காலை ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. முதலில் தபால் ஓட்டும், அதை தொடர்ந்து மின்னணு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தின், எட்டு தொகுதி எம்.எல்.ஏ.,க்கள் யார்? என்பது நாளை தெரிந்து விடும். சட்டசபை தேர்தல் பிப்.,26ல் அறிவிக்கப்பட்டு, மார்ச், 12ல் மனுத்தாக்கல் துவங்கி, 19ல் முடிந்தது. ஏப்., 6ல் தேர்தல் நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் எட்டு தொகுதியில், 76.91 சதவீத ஓட்டு பதிவானது. இந்நிலையில் நாளை காலை ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. முதலில் தபால் ஓட்டும், அதை தொடர்ந்து மின்னணு இயந்திரங்களில் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்படும். எட்டு தொகுதியில், நான்கு மேஜைகளில் தபால் ஓட்டும், 14 மேஜைகளில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர பதிவும் எண்ணப்படுகிறது. ஈரோடு கிழக்கில், 23 சுற்று, ஈரோடு மேற்கில், 29 சுற்று, மொடக்குறிச்சி, 24 சுற்று, பெருந்துறையில், 24 சுற்று, பவானியில், 24 சுற்று, அந்தியூரில், 22 சுற்று, கோபியில், 25 சுற்று, பவானிசாகரில், 27 சுற்று என, 198 சுற்று எண்ணிக்கை நடக்க உள்ளது. எட்டு தொகுதிகளில் மொத்தம், 128 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் எட்டு பேர் எம்.எல்.ஏ.,க்களாக வெற்றி வாகை சூடுவர். கொரோனா தொற்று காலமாக உள்ளதால், பல்வேறு விதிமுறைகளின் கீழ் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இதனால் மாலை, 4:00 முதல் நள்ளிரவுக்குள் முழு ஓட்டு எண்ணிக்கையை முடித்து, அறிவிக்க திட்டமிட்டு பணி நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X