தனியார் கல்லூரியில் எலக்ட்ரீஷியன் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனியார் கல்லூரியில் எலக்ட்ரீஷியன் பலி

Added : மே 01, 2021
Share
கோபி: கோபி அருகே தனியார் கல்லூரியில், பணியின் போது மின்சாரம் தாக்கி, எலக்ட்ரீஷியன் பலியானார். கோபி அருகே கே.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் கவின்மணிசெல்வன், 21. எலக்ட்ரீஷியன்; கோபி ஒத்தக்குதிரை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், பின்புறத்தில் உள்ள ஒரு கட்டடத்தில், நேற்று காலை, எலக்ட்ரிக்கல் வேலையில் ஈடுபட்டார். அவருடன் பிரகதீஸ்வரன், 19, ஸ்ரீதர், 20,

கோபி: கோபி அருகே தனியார் கல்லூரியில், பணியின் போது மின்சாரம் தாக்கி, எலக்ட்ரீஷியன் பலியானார். கோபி அருகே கே.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் கவின்மணிசெல்வன், 21. எலக்ட்ரீஷியன்; கோபி ஒத்தக்குதிரை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், பின்புறத்தில் உள்ள ஒரு கட்டடத்தில், நேற்று காலை, எலக்ட்ரிக்கல் வேலையில் ஈடுபட்டார். அவருடன் பிரகதீஸ்வரன், 19, ஸ்ரீதர், 20, ஆகியோரும் பணியில் ஈடுபட்டிருந்தனர். பணி நிமித்தமாக மூவரும் சேர்ந்து, 40 அடி உயர அலுமினிய ஏணியை தள்ளி சென்றனர். அப்போது உயர் மின்னழுத்த மின்கம்பியில் ஏணி மோதியது. இதில் மூவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. மற்ற இருவரும் லேசான காயத்துடன் தப்பிய நிலையில், கவின்மணி செல்வன் மயங்கி விழுந்தார். கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X