பொது செய்தி

தமிழ்நாடு

4 சாயப்பட்டறையில் மின்சாரம் துண்டிப்பு

Added : மே 01, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் தெற்கு வட்ட பகுதியில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் அலுவலர்கள், நேற்று சோதனை நடத்தினர். அப்போது, முறைகேடாக, நான்கு சாயப்பட்டறைகள் செயல்படுவது, சுத்திகரிப்பு நிலையம் இன்றி கழிவுநீரை அப்படியே கால்வாயில் வெளியேற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. கொண்டலாம்பட்டி, கலர்காடு மகேந்திரன் டையிங்; தானங்காட்டில் ராஜேஷ், தேவேந்தர்

சேலம்: சேலம் தெற்கு வட்ட பகுதியில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் அலுவலர்கள், நேற்று சோதனை நடத்தினர். அப்போது, முறைகேடாக, நான்கு சாயப்பட்டறைகள் செயல்படுவது, சுத்திகரிப்பு நிலையம் இன்றி கழிவுநீரை அப்படியே கால்வாயில் வெளியேற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. கொண்டலாம்பட்டி, கலர்காடு மகேந்திரன் டையிங்; தானங்காட்டில் ராஜேஷ், தேவேந்தர் சாயப்பட்டறைகள்; சீலநாயக்கன்பட்டி, பெருமாள்கோவில் மேடு, ஸ்ரீவாரி கலர்ஸ் சித்துராஜ் சாயசாலை ஆகிய பட்டறைகளின் மின் இணைப்பு, உடனே துண்டிக்கப்பட்டது. அபராதம் விதிக்க, வாரியத்துக்கு பரிந்துரைக்கப்பட்டது. உரிமையாளர்கள் மகேந்திரன், ராஜேஷ், தேவேந்தர், சித்துராஜ் ஆகியோரை, பொறியாளர் எச்சரித்தார். அத்துடன், அனுமதியின்றி இயங்கிய மணிகண்டன் என்பவரின் சாயப்பட்டறைக்கு, 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X