பொது செய்தி

தமிழ்நாடு

விதிமீறிய 3 துணி கடைக்கு 'சீல்'

Added : மே 01, 2021
Share
Advertisement
சேலம்: விதிமீறி செயல்பட்ட மூன்று துணி கடைகளுக்கு, 'சீல்' வைக்கப்பட்டது. கொரோனா பரவலை தடுக்க, 3,000 சதுரடி பரப்புக்கு அதிகமுள்ள கடைகளை மூட உத்தரவிடப்பட்டது. ஆனால், சேலம், நான்கு ரோட்டில் உள்ள துணி கடைகளில், பின்புற கதவு வழியாக, விற்பனை நடப்பதாக புகார் எழுந்தது. மாநகராட்சி அலுவலர்கள் நடத்திய ஆய்வில், டி.வி.எஸ்., பஸ் ஸ்டாப் அருகில் இருந்து, அடுத்தடுத்து இருந்து மூன்று கடைகள்,

சேலம்: விதிமீறி செயல்பட்ட மூன்று துணி கடைகளுக்கு, 'சீல்' வைக்கப்பட்டது. கொரோனா பரவலை தடுக்க, 3,000 சதுரடி பரப்புக்கு அதிகமுள்ள கடைகளை மூட உத்தரவிடப்பட்டது. ஆனால், சேலம், நான்கு ரோட்டில் உள்ள துணி கடைகளில், பின்புற கதவு வழியாக, விற்பனை நடப்பதாக புகார் எழுந்தது. மாநகராட்சி அலுவலர்கள் நடத்திய ஆய்வில், டி.வி.எஸ்., பஸ் ஸ்டாப் அருகில் இருந்து, அடுத்தடுத்து இருந்து மூன்று கடைகள், விதிமீறி விற்பனையில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. அவற்றுக்கு தலா, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததோடு, கடைகளும் பூட்டி, 'சீல்' வைக்கப்பட்டது. விதிமீறும் வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் எச்சரித்துள்ளார்.

2 கடை, 20 பேர் மீது வழக்கு: தாரமங்கலம், பவளத்தானூரில் உள்ள ஓட்டல், நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு மேல் திறந்திருந்தது. அதேபோல், அங்குள்ள ரவுண்டானா அருகே, பேக்கரி நள்ளிரவு, 1:00 மணிக்கு செயல்பட்டது. இதனால், இரு கடைகள் மீது, 144 தடை உத்தரவை மீறியதாக, தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்தனர். அதேபோல், ஓமலூரில், 10:00 மணிக்கு மேல் அனுமதியின்றி வெளியே சுற்றிய, இருசக்கர வாகன ஓட்டிகள், 20 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிந்தனர்.

தனியார் மருத்துவமனைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்: சேலம், சீலநாயக்கன்பட்டி, ஜி.ஆர்.நகரில், மருத்துவ கழிவு சாலையோரம் கொட்டப்படுவதாக புகார் எழுந்தது. சுகாதார ஆய்வாளர்கள் சந்திரன், கோபிநாத் ஆய்வு மேற்கொண்டபோது, மருத்துவ கழிவு கொட்டப்பட்டது உறுதியானது. அவற்றை சாலையில் கொட்டிய, தனியார் மருத்துவமனை நிர்வாகத்துக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும், மருத்துவ கழிவு முறையாக அகற்றப்படுவதை உறுதிசெய்ய, முறையாக கையாளாத மருத்துவமனை நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க, மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.


மேட்டூர்: மேட்டூரில், சமூக இடைவெளி கடைப்பிடிக்காத டீ, ஓட்டல், பேக்கரி உள்பட, 18 கடைகளுக்கு தலா, 500 வீதம், 9,000 ரூபாய், முக கவசம் அணியாத, 15 பேருக்கு தலா, 200 வீதம், 3,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X