பொது செய்தி

தமிழ்நாடு

547 பேருக்கு தொற்று: 10 பேர் உயிரிழப்பு

Added : மே 01, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் மாவட்டத்தில், 547 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், 10 பேர் உயிரிழந்தனர்.சேலம் மாவட்டத்தில், நேற்று, 547 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதன்படி, சேலம் மாநகராட்சியில், 263 பேர், ஆத்தூர், 26, வீரபாண்டி, 24, ஓமலூர், 21, சேலம் ஒன்றியம், தலைவாசல் தலா, 19, தாரமங்கலம், 16, வாழப்பாடி, கொளத்தூர், மேச்சேரி, நங்கவள்ளி தலா, 15, இடைப்பாடி, 14, பி.என்.பட்டி, சங்ககிரி தலா, 13,

சேலம்: சேலம் மாவட்டத்தில், 547 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், 10 பேர் உயிரிழந்தனர்.


சேலம் மாவட்டத்தில், நேற்று, 547 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதன்படி, சேலம் மாநகராட்சியில், 263 பேர், ஆத்தூர், 26, வீரபாண்டி, 24, ஓமலூர், 21, சேலம் ஒன்றியம், தலைவாசல் தலா, 19, தாரமங்கலம், 16, வாழப்பாடி, கொளத்தூர், மேச்சேரி, நங்கவள்ளி தலா, 15, இடைப்பாடி, 14, பி.என்.பட்டி, சங்ககிரி தலா, 13, காடையாம்பட்டி, அயோத்தியாப்பட்டணம் தலா, 12, பெத்தநாயக்கன்பாளையம், 11, கெங்கவல்லி, 7, நரசிங்கபுரம் நகராட்சி, கொங்கணாபுரம் தலா, 6, மேட்டூர் நகராட்சி, மகுடஞ்சாவடி, தலா, 2, ஆத்தூர் நகராட்சி ஒருவர் என, மாவட்டத்தில், 547 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது. இவர்களுடன் சேர்த்து இதுவரை, 41 ஆயிரத்து, 439 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமாகி வீடு திரும்பியோர், 37 ஆயிரத்து, 416 பேர். நேற்று மட்டும் 10 பேர் இறந்தனர். இதுவரை இறந்தோர், 520 பேர். தற்போது, 3,503 பேர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களில், தனியார் மருத்துவமனைகளில், 1,562 பேர் அடங்கும். நேற்றைய பரிசோதனை, 5,670 பேர். இதுவரை, ஏழு லட்சத்து, 88 ஆயிரத்து, 617 பேர் பரிசோதனை செய்து கொண்டுள்ளனர். அதேபோல், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், 3 லட்சத்து, 34 ஆயிரத்து, 693 பேர்.


தலைவர் உள்பட 10 பேர்: மேட்டூரில், மேட்டூர் டேம் ரோட்டரி சங்கத்தின், 53 வயது தலைவர் உள்பட, 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது, நேற்று உறுதியானது. தலைவர், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

19,700 தடுப்பூசிகள்: சென்னையில் இருந்து, சேலம், பழைய நாட்டாண்மை கழக கட்டடத்தில் உள்ள, மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்துக்கு, நேற்று தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டன. இதுகுறித்து, மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் செல்வகுமார்(பொ) கூறியதாவது: சேலம், ஆத்தூர் சுகாதார மாவட்டத்துக்கு தடுப்பூசிகள் வந்துள்ளன. அதன்படி, சேலத்துக்கு, 10 ஆயிரம், ஆத்தூருக்கு, 9,700 என, 19 ஆயிரத்து, 700 கோவிஷீல்டு தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டன. தேவைக்கு ஏற்ப, அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X