உடற்பயிற்சி கூடம் பகுதி நேரமாக இயங்க அனுமதிக்க வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உடற்பயிற்சி கூடம் பகுதி நேரமாக இயங்க அனுமதிக்க வலியுறுத்தல்

Added : மே 01, 2021
Share
சேலம்: உடற்பயிற்சி கூடங்கள் பகுதி நேரமாக இயங்க அனுமதிக்கும்படி, இரு அரசுகளுக்கும் வலியுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து, சேலம் மாவட்ட அமெச்சூர் பாடி பில்டிங் அசோசியேஷன் பொதுச்செயலர் மயில்சாமி தலைமையில் நிர்வாகிகள், கலெக்டர் அலுவலகத்தில், நேற்று அளித்த மனு: கொரோனா இரண்டாம் அலையால் உடற்பயிற்சி கூடங்களை, கடந்த, 26 முதல், தற்காலிகமாக மூட, மத்திய, மாநில அரசுகள்

சேலம்: உடற்பயிற்சி கூடங்கள் பகுதி நேரமாக இயங்க அனுமதிக்கும்படி, இரு அரசுகளுக்கும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


இதுகுறித்து, சேலம் மாவட்ட அமெச்சூர் பாடி பில்டிங் அசோசியேஷன் பொதுச்செயலர் மயில்சாமி தலைமையில் நிர்வாகிகள், கலெக்டர் அலுவலகத்தில், நேற்று அளித்த மனு: கொரோனா இரண்டாம் அலையால் உடற்பயிற்சி கூடங்களை, கடந்த, 26 முதல், தற்காலிகமாக மூட, மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன. இதனால், மாவட்டத்தில் செயல்படும், 300க்கும் மேற்பட்ட உடற்பயிற்சி கூட உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,000க்கும் மேற்பட்ட பயிற்சியாளர் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. ஏற்கனவே, கொரோனா முதல் அலை பாதிப்பின்போது, உடற்பயிற்சி கூடங்களை மூடியதால், வாடகை, கடன் தவணை செலுத்த முடியாமல் தவித்தோம். அதிலிருந்து இன்னும் மீள முடியவில்லை. அதனால், உடற்பயிற்சி கூடங்களை, பகுதி நேரமாக திறக்க அனுமதித்து, உரிமையாளர்கள், பயிற்சியாளர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவ வேண்டும். அரசு விதிக்கும் நிபந்தனை, வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன், உடற்பயிற்சி கூடங்களை நடத்த தயாராக உள்ளோம். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X