பொது செய்தி

தமிழ்நாடு

ஓய்வூதியம் 3 மாதம் நிலுவை: மருத்துவ செலவுக்கு பணமின்றி ஓய்வூதியர் தவிப்பு

Added : மே 01, 2021
Share
Advertisement
சேலம்: கொரோனா சூழலில், மாநகராட்சியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவருக்கு, மூன்று மாதம் ஓய்வூதியம் வழங்கப்படாததால், மருத்துவ செலவுக்கு கூட பணிமின்றி தவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து, சேலம் மண்டல மாநகராட்சி, நகராட்சி ஓய்வூதியர் சங்கத்தலைவர் வெங்கடாசலம் கூறியதாவது: சேலம் மாநகராட்சியில் கொரோனா முன்கள பணியாளர், மற்ற பணியாளர், ஓய்வூதியம் பெறுவோருக்கு,

சேலம்: கொரோனா சூழலில், மாநகராட்சியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவருக்கு, மூன்று மாதம் ஓய்வூதியம் வழங்கப்படாததால், மருத்துவ செலவுக்கு கூட பணிமின்றி தவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இதுகுறித்து, சேலம் மண்டல மாநகராட்சி, நகராட்சி ஓய்வூதியர் சங்கத்தலைவர் வெங்கடாசலம் கூறியதாவது: சேலம் மாநகராட்சியில் கொரோனா முன்கள பணியாளர், மற்ற பணியாளர், ஓய்வூதியம் பெறுவோருக்கு, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஊதியம், ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. ஓய்வூதியம் பெறுவோர், வயதான காலத்தில் மருத்துவ செலவுக்கு கூட பணமின்றி சிரமத்தை சந்தித்து வருகின்றனர். கடந்த, 2017 ஏப்., 1 முதல், ஓய்வு பெற்றவர்களுக்கு பணிக்கொடை போன்ற ஓய்வூதிய பலன், 10.5 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. சங்கம் மூலம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. மாநகராட்சி மாநில நிதிக்குழு, மாதந்தோறும் வழங்கும், 6.25 கோடி ரூபாய் மானியத்தையும், கந்து வட்டிக்காரர் போல், நிர்வாக ஆணையரால் கடனுக்கு பிடித்தம் செய்யப்படுகிறது. ஒப்பந்ததாரர்களுக்கு நிலுவை ரசீது கொடுக்க மட்டும், 80 கோடி ரூபாய், அரசு கடன் வழங்கியுள்ளது. இன்னும், 20 கோடி ரூபாய் கொடுத்து, ஓய்வூதியர்களின் நிலுவையை வழங்கி இருக்கலாம். நகராட்சி நிர்வாகத்துக்கு, கண்டனத்தை தெரிவிப்பதோடு, நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X