பொது செய்தி

தமிழ்நாடு

மூலவரை மறைத்து திரை; அகற்ற பா.ஜ., கோரிக்கை

Added : மே 01, 2021
Share
Advertisement
சேலம்: ராஜகணபதி கோவில் மூலவரை மறைத்து போடப்பட்டுள்ள திரையை அகற்ற, பா.ஜ.,வினர் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து, சேலம், சுகவனேஸ்வரர் கோவில் உதவி கமிஷனருக்கு பா.ஜ., மேற்கு மாவட்ட பார்வையாளர் கோபிநாத் அனுப்பிய மனு: சேலம், ராஜகணபதி கோவிலில், அபி?ஷகம், சூரிய, சந்திர கிரகணங்களின்போது மட்டும் மூலவர் முன் திரையிடுவது வழக்கம். கொரோனா முதல் அலை பரவலை தடுக்க ஊரடங்கால், கடந்த ஆண்டு

சேலம்: ராஜகணபதி கோவில் மூலவரை மறைத்து போடப்பட்டுள்ள திரையை அகற்ற, பா.ஜ.,வினர் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து, சேலம், சுகவனேஸ்வரர் கோவில் உதவி கமிஷனருக்கு பா.ஜ., மேற்கு மாவட்ட பார்வையாளர் கோபிநாத் அனுப்பிய மனு: சேலம், ராஜகணபதி கோவிலில், அபி?ஷகம், சூரிய, சந்திர கிரகணங்களின்போது மட்டும் மூலவர் முன் திரையிடுவது வழக்கம். கொரோனா முதல் அலை பரவலை தடுக்க ஊரடங்கால், கடந்த ஆண்டு திரையிடப்பட்ட நிலையில், தங்கள் கவனத்துக்கு கொண்டு வந்ததால், திரை அகற்றப்பட்டது. ஒவ்வொரு கோவிலுக்கும் மரபு, பழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. மரபை மாற்ற முயற்சிக்க வேண்டாம். அதனால், கொரோனா இரண்டாம் அலையால், ராஜகணபதி மூலவர் முன் போடப்பட்டுள்ள திரையை உடனே அகற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X