தனிமை மையத்துக்கு உணவு எடுத்துச்செல்ல சத்துணவு பணியாளர்கள் மறுப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தனிமை மையத்துக்கு உணவு எடுத்துச்செல்ல சத்துணவு பணியாளர்கள் மறுப்பு

Added : மே 01, 2021
Share
பனமரத்துப்பட்டி: தனிமை மையத்துக்கு உணவு எடுத்துச்செல்ல, சத்துணவு பணியாளர்கள் மறுத்துள்ளனர்.சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி, சந்தியூரில் உள்ள தனியார் பள்ளியில், கொரோனா தனிமை மையம் செயல்படுகிறது. அங்கு, லேசான நோய் அறிகுறி உள்ளவர்களை தங்க வைத்து சிகிச்சை அளிக்கின்றனர். தற்போது, 19 பேர் உள்ளனர். அவர்களுக்கு, பனமரத்துப்பட்டி ஒன்றிய அலுவலகம் மூலம், தினமும் மூன்று வேளை உணவு

பனமரத்துப்பட்டி: தனிமை மையத்துக்கு உணவு எடுத்துச்செல்ல, சத்துணவு பணியாளர்கள் மறுத்துள்ளனர்.


சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி, சந்தியூரில் உள்ள தனியார் பள்ளியில், கொரோனா தனிமை மையம் செயல்படுகிறது. அங்கு, லேசான நோய் அறிகுறி உள்ளவர்களை தங்க வைத்து சிகிச்சை அளிக்கின்றனர். தற்போது, 19 பேர் உள்ளனர். அவர்களுக்கு, பனமரத்துப்பட்டி ஒன்றிய அலுவலகம் மூலம், தினமும் மூன்று வேளை உணவு வழங்கப்படுகிறது. அதற்காக, ஒன்றிய அலுவலக வளாகத்தில், மகளிர் குழு நடத்தும் உணவகத்தில் சமைக்கப்படுகிறது. தினமும் காலை, 6:00 மணிக்கு ஒன்றிய அலுவலகம் வந்து, மகளிர் குழு தயாரிக்கும் உணவு பொருட்களை, தனிமை மையத்துக்கு எடுத்துச்சென்று வழங்க வேண்டும் என, கடந்த, 27ல், சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர்களுக்கு, ஒன்றிய அதிகாரிகள் உத்தர விட்டிருந்தனர். ஆனால், 'சமைத்து மட்டும் வைக்கிறோம். பணியாளர்களை வைத்து, உணவை எடுத்து செல்லுங்கள்' என, அதிகாரிகளிடம், மகளிர் குழுவினர் கூறினர். தொற்று அச்சத்தால், உணவு எடுத்துச்செல்லும் பணியில் ஈடுபட மறுத்துள்ளனர்.

இதுகுறித்து, ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது: தனிமை மையத்துக்கு உணவு வழங்குவதை கண்காணிக்கும் பணியை, சத்துணவு பணியாளருக்கு ஒதுக்கினோம். அங்கு, எத்தனை பேர் தங்கியுள்ளனர். அவர்களுக்கு, காலை, மதியம், இரவு வழங்கப்படும் உணவு வகை, எண்ணிக்கையை கண்காணித்து, கணக்கெடுக்க அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இப்பணியில் ஈடுபட, சத்துணவு பணியாளர்கள் வர மறுக்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X