பொது செய்தி

தமிழ்நாடு

மாரண்டஹள்ளி பகுதியில் கொரோனா விழிப்புணர்வு

Added : மே 01, 2021
Share
Advertisement
பாலக்கோடு: பாலக்கோடு அடுத்த மாரண்டஹள்ளி தேர்வுநிலை பேரூராட்சி மற்றும் தேசிய வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில், கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வு நடந்தது. மாரண்டஅள்ளி தேர்வுநிலை பேரூராட்சி எல்லைக்குட்பட்ட வணிகர்கள், உணவகங்கள், தங்கும் விடுதி, திரையரங்குகள் மற்றும் பிற அலுவலகங்கள் நடத்துபவர்கள், வீடுகளில் வசிப்பவர்கள் கொரோனா தடுப்பை மேற்கொள்ள வேண்டும், பொது

பாலக்கோடு: பாலக்கோடு அடுத்த மாரண்டஹள்ளி தேர்வுநிலை பேரூராட்சி மற்றும் தேசிய வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில், கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வு நடந்தது. மாரண்டஅள்ளி தேர்வுநிலை பேரூராட்சி எல்லைக்குட்பட்ட வணிகர்கள், உணவகங்கள், தங்கும் விடுதி, திரையரங்குகள் மற்றும் பிற அலுவலகங்கள் நடத்துபவர்கள், வீடுகளில் வசிப்பவர்கள் கொரோனா தடுப்பை மேற்கொள்ள வேண்டும், பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது. பயன்படுத்திய முககவசங்களை தெருக்களில் வீசாமல் தீயிட்டு எரிக்க வேண்டும். பொது இடங்களில் முக கவசம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி இலவசமாக முக கவசங்கள், கபசுரகுடிநீர் வழங்கினர். பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்தி, டி.எஸ்.பி., தினகரன், பேரூராட்சி கிளர்க் சம்பத் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.



Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X