பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா நிவாரணம் வழங்ககோரி விவசாய தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

Added : மே 01, 2021
Share
Advertisement
அரூர்: ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதந்தோறும் தலா, 7,500 ரூபாய் கொரோனா நிவாரணம் வழங்க வேண்டும் என, வலியுறுத்தி அரூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த மோப்பிரிப்பட்டி குறிஞ்சி நகரில் உள்ள சி.பி.எம்., அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமை

அரூர்: ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதந்தோறும் தலா, 7,500 ரூபாய் கொரோனா நிவாரணம் வழங்க வேண்டும் என, வலியுறுத்தி அரூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த மோப்பிரிப்பட்டி குறிஞ்சி நகரில் உள்ள சி.பி.எம்., அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். இதில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் கொரோனா நிவாரணமாக மாதந்தோறும் தலா, 7,500 ரூபாய் வழங்க வேண்டும். அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும். 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் பணி வழங்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் போர்க்கால அடிப்படையில் குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் சி.பி.எம்., மாவட்ட செயலாளர் குமார், அ.இ.வி.தொ.ச., மாவட்ட செயலாளர் முத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X