பொது செய்தி

தமிழ்நாடு

திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவி

Added : மே 01, 2021
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரியில் வசிக்கும் திருநங்கைகளுக்கு, சீட்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில், நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி சீட்ஸ் தொண்டு நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, தர்மபுரி மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட மேலாளர் உலகநாதன் தலைமை வகித்தார். சீட்ஸ் தொண்டு நிறுவனத்தில், 'இலக்கு மக்கள்

தர்மபுரி: தர்மபுரியில் வசிக்கும் திருநங்கைகளுக்கு, சீட்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில், நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி சீட்ஸ் தொண்டு நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, தர்மபுரி மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட மேலாளர் உலகநாதன் தலைமை வகித்தார். சீட்ஸ் தொண்டு நிறுவனத்தில், 'இலக்கு மக்கள் திட்டத்தில்' இணைந்துள்ள, 100 திருநங்கைகளுக்கு 'சென்னை யுனைடெட் வே' நிறுவனம் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. அரிசி, பருப்பு, கோதுமை, ரவை, ஆயில், மசாலா பொருட்கள், சோப்பு உள்ளிட்ட, 13 வகையான, 4,000 ரூபாய் மதிப்பிலான பொருட்கள், 100 பேருக்கு வழங்கப்பட்டன. இதன் மொத்த மதிப்பு, நான்கு லட்சம் ரூபாய். இவற்றை, தர்மபுரி டீப்ஸ் தொண்டு நிறுவன இயக்குனர் சங்கர், சீட்ஸ் தொண்டு நிறுவன இயக்குனர் சரவணன் ஆகியோர் இவர்களுக்கு வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X