சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக் மீது லாரி மோதி கூலிதொழிலாளி பலி

Added : மே 01, 2021
Share
Advertisement
பாப்பிரெட்டிப்பட்டி: கடத்தூர் அருகே, பைக் மீது லாரி மோதி கூலித்தொழிலாளி பலியானார். தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அடுத்த தாஸ் நகரை சேர்ந்தவர் தீத்து, 56, கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை தன் வீட்டில் இருந்து டி.வி.எஸ். மொபட்டில் அரிசி எடுத்து கொண்டு தேக்கல்நாய்க்கன்பட்டியில் உள்ள பேத்தி வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். கடத்தூர் - பொம்மிடி ரோட்டில் மாலை, 7:30

பாப்பிரெட்டிப்பட்டி: கடத்தூர் அருகே, பைக் மீது லாரி மோதி கூலித்தொழிலாளி பலியானார். தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அடுத்த தாஸ் நகரை சேர்ந்தவர் தீத்து, 56, கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை தன் வீட்டில் இருந்து டி.வி.எஸ். மொபட்டில் அரிசி எடுத்து கொண்டு தேக்கல்நாய்க்கன்பட்டியில் உள்ள பேத்தி வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். கடத்தூர் - பொம்மிடி ரோட்டில் மாலை, 7:30 மணியளவில் திண்டலானூர் அருகே சென்றபோது பொம்மிடியில் இருந்து கடத்தூர் நோக்கி வந்த லாரி, பைக் மீது மோதியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே தீத்து உயிரிழந்தார். கடத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X