சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நேருக்கு நேர் மோதிய கார் - பைக் தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் பலி

Added : மே 01, 2021
Share
Advertisement
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே, காரும்,பைக்கும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூருவில் இருந்து வந்த பைக்கும், ஊத்தங்கரையில் இருந்து சென்ற காரும் நேற்று காலை, 10:30 மணியளவில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் இரண்டு வாகனங்களும் சாலையின் அருகே இருந்த பள்ளத்தில் விழுந்து

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே, காரும்,பைக்கும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார்.


கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூருவில் இருந்து வந்த பைக்கும், ஊத்தங்கரையில் இருந்து சென்ற காரும் நேற்று காலை, 10:30 மணியளவில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் இரண்டு வாகனங்களும் சாலையின் அருகே இருந்த பள்ளத்தில் விழுந்து தீப்பற்றியது. காரில் இருந்த நபர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பைக்கில் வந்த இரண்டு பேரில் நந்து, 26, என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது நண்பர் சசி, 28, கால் முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஊத்தங்கரை தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான வீரர்கள் வாகனங்களில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். விசாரணையில் ஊத்தங்கரை அக்ரஹார தெருவை சேர்ந்த கோவிந்தராஜ், 55, திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டார கல்வி அலுவலராக உள்ளார். இவர் மனைவி சித்ரா கருவானூர் பள்ளி தலைமை ஆசிரியராக உள்ளார். தன் மனைவியை பள்ளிக்கு அழைத்து செல்லும்போது. பெங்களூருவை சேர்ந்த நந்து, 26, சசி, 28, ஆகியோர் பைக்கில் வந்து மோதியதாக கூறப்படுகிறது. ஊத்தங்கரை இன்ஸ்பெக்டர், லட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X