சேதமடைந்த மின் கம்பத்தை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை

Added : மே 01, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: துணை மின்நிலையம் அருகில், சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா வேலம்பட்டிக்கும், என்.தட்டக்கல் கிராமத்திற்கும் இடையில் நாகரசம்பட்டி துணை மின்நிலையம் உள்ளது. இங்கிருந்து, 200 மீட்டர் தொலைவில் சாலையோரம் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இதில் உள்ள ஒரு மின்கம்பம், நான்கு ஆண்டுகளாக சேதமடைந்து

கிருஷ்ணகிரி: துணை மின்நிலையம் அருகில், சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா வேலம்பட்டிக்கும், என்.தட்டக்கல் கிராமத்திற்கும் இடையில் நாகரசம்பட்டி துணை மின்நிலையம் உள்ளது. இங்கிருந்து, 200 மீட்டர் தொலைவில் சாலையோரம் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இதில் உள்ள ஒரு மின்கம்பம், நான்கு ஆண்டுகளாக சேதமடைந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. பலத்த மழை பெய்தாலோ, காற்று வீசினாலோ கம்பம் உடைந்து டிரான்ஸ்பார்மர் கீழே விழும் அபாயம் உள்ளது. மேலும் டிரான்ஸ்பார்மர் அருகில் உள்ள ஒரு மின்கம்பமும் சேதமடைந்து விழுந்துவிடும் நிலையில் உள்ளது. இரண்டு மின் கம்பங்களையும் மாற்று வதற்காக, ஓராண்டுக்கு முன்பு இரண்டு புதிய மின்கம்பங்களையும் அங்கு கிடத்தி உள்ளனர். ஆனால் இன்று வரை மாற்ற மின்வாரிய ஊழியர்களுக்கு மனமில்லை. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் சேதமடைந்த மின்கம்பங்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X