குவியல், குவியலாக கொரோனா உபகரணங்கள்; அச்சத்தில் நோயாளிகள்

Added : மே 01, 2021
Share
Advertisement
ஓசூர்: ஓசூர் அருகே, அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், செவிலியர்கள் பயன்படுத்திய பாதுகாப்பு உடைகள் கிடப்பதால், நோயாளிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், ஓசூர் அடுத்த பாகலூரில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய

ஓசூர்: ஓசூர் அருகே, அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், செவிலியர்கள் பயன்படுத்திய பாதுகாப்பு உடைகள் கிடப்பதால், நோயாளிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், ஓசூர் அடுத்த பாகலூரில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்களால் பயன்படுத்தப்பட்ட கொரோனா பாதுகாப்பு உடைகள், பரிசோதனை கழிவுகள், கையுரைகள் ஆகியவை குவியல், குவியலாக குவித்து பிளாஸ்டிக் கவர்களில் வைக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் கவர்கள் கிழிந்து, மருத்துவமனை வளாகத்தில் உடைகள் பறந்து வருகின்றன. பாகலூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, தினமும் ஏராளனமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். கொரோனா வேகமாக பரவி வரும் சூழ்நிலையில், பயன்படுத்தப்பட்ட பாதுகாப்பு உடைகளை பார்த்து, நோயாளிகள் அதிர்ச்சியில் உச்சத்திற்கு செல்கின்றனர். மிகவும் பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டிய மருத்துவ கழிவுகளை, மருத்துவமனை வளாகத்திலேயே வைத்திருப்பது, நோயாளிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X