பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டு எண்ணும் மையத்தில் ஆறு டி.எஸ்.பி.,க்கள் உள்பட 664 போலீசார் பாதுகாப்பு

Added : மே 01, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: ஓட்டு எண்ணும் மையத்தில், ஆறு டி.எஸ்.பி.,க்கள், 13 இன்ஸ்பெக்டர்கள் உள்பட, 664 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டசபை தொகுதிகளில் பதிவான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. இதற்கான ஓட்டு எண்ணிக்கை நாளை (மே, 2) துவங்குகிறது. முதல் கட்டமாக காலை, 8:00 மணிக்கு தபால் ஓட்டுகள்

கிருஷ்ணகிரி: ஓட்டு எண்ணும் மையத்தில், ஆறு டி.எஸ்.பி.,க்கள், 13 இன்ஸ்பெக்டர்கள் உள்பட, 664 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டசபை தொகுதிகளில் பதிவான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. இதற்கான ஓட்டு எண்ணிக்கை நாளை (மே, 2) துவங்குகிறது. முதல் கட்டமாக காலை, 8:00 மணிக்கு தபால் ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. அதன்படி ஆறு தொகுதிகளுக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்கள் என, 140 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஓட்டு எண்ணும் மையத்தில், 84 மேஜைகளுக்கு, 102 ஓட்டு எண்ணும் கண்காணிப்பாளர்கள், 102 உதவியாளர்கள், 102 நுண்பார்வையாளர்கள், ஆறு தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மூன்று உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 86 வேட்பாளர்கள், 1,216 முகவர்கள் என மொத்தம், 1,617 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஓட்டு எண்ணும் மைய வளாகத்தில் மூன்று டி.எஸ்.பி.,க்கள், ஆறு இன்ஸ்பெக்டர்கள், 60 போலீசார் என மொத்தம், 69 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர். மேலும் ஓட்டு எண்ணும் மையத்தை சுற்றியுள்ள பகுதிகளில், மூன்று டி.எஸ்.பி.,க்கள், ஏழு இன்ஸ்பெக்டர்கள், 16 எஸ்.ஐ.,கள் மற்றும் எஸ்.எஸ்.ஐ.,க்கள், 431 போலீசார் என மொத்தம், 595 போலீசார் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். எனவே, ஓட்டு எண்ணும் மையத்திற்கு வரும் அனைவரும், இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெயசந்திரபானு ரெட்டி கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X