பொது செய்தி

தமிழ்நாடு

'வாட்ஸ் ஆப்' குழு அமைத்து கறி சோறு 'கட்டும்' வாலிபர்கள்

Added : மே 01, 2021
Share
Advertisement
புதுக்கோட்டை: கறம்பக்குடி பகுதியில், 'பூஜை சோறு தகவல் மையம்' எனும், 'வாட்ஸ் ஆப்' குழு அமைத்து, இளைஞர்கள் அன்னதானம், கிடா வெட்டு பூஜை சோறு சாப்பிட்டு வருகின்றனர்.புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதி கோவில்களில், அதிகமாக கிடா வெட்டு பூஜை மற்றும் அன்னதானம் நடக்கும். இதில், அப்பகுதி பொதுமக்கள் பங்கேற்று, அன்னதானம் சாப்பிடுவது வழக்கம். ஒரு கோவிலில் அன்னதானம்

புதுக்கோட்டை: கறம்பக்குடி பகுதியில், 'பூஜை சோறு தகவல் மையம்' எனும், 'வாட்ஸ் ஆப்' குழு அமைத்து, இளைஞர்கள் அன்னதானம், கிடா வெட்டு பூஜை சோறு சாப்பிட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதி கோவில்களில், அதிகமாக கிடா வெட்டு பூஜை மற்றும் அன்னதானம் நடக்கும். இதில், அப்பகுதி பொதுமக்கள் பங்கேற்று, அன்னதானம் சாப்பிடுவது வழக்கம். ஒரு கோவிலில் அன்னதானம் நடைபெறுவதை அனைவருக்கும் தெரிவிக்க, அப்பகுதி இளைஞர்கள், 'வாட்ஸ் ஆப்' குழு ஒன்றை துவக்கினர். அதற்கு, 'பூஜை சோறு தகவல் மையம்' என பெயரிட்டனர். இந்தக் குழுவில், 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இணைந்துள்ளனர். தினமும் காலையில், எந்த கோவிலில் அன்னதானம் மற்றும் கிடா வெட்டு பூஜை நடக்கிறது; எத்தனை மணிக்கு அன்னதானம் துவங்கும் என, விரிவாக பதிவிடுகின்றனர். அத்துடன், சைவம், அசைவம் என, சாப்பாடு விபரத்தையும் பதிவிடுகின்றனர். இந்தக் கோவிலில் சைவம், அந்தக் கோவிலில் அசைவம் என பதிவிடுவதால், இளைஞர்களுக்கு எது விருப்பமோ, அங்கு சென்று சாப்பிட்டு வருகின்றனர். குழு, 'அட்மின்கள்' தீத்தான்விடுதியைச் சேர்ந்த சின்னத்துரை மற்றும் முருகேசன் கூறியதாவது: இப்படி குழு அமைத்து, பூஜை மற்றும் அன்னதானத்தில் சாப்பிட்டு வருவது, எங்களுக்கு மன மகிழ்வை தருகிறது. மேலும், நண்பர்கள் ஒன்றுகூடி, அன்னதானம் சாப்பிடுவதால், மனம் விட்டு பேசும் வாய்ப்பு கிடைக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X