பொது செய்தி

தமிழ்நாடு

காளைகள் பூட்டி செக்கில் பாரம்பரிய முறைப்படி எண்ணெய் தயாரிக்கும் பொறியியல் பட்டதாரி

Added : மே 01, 2021
Share
Advertisement
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மணியம்பாடி கிராமத்தை சேர்ந்த அருள், 42, பொறியியல் பட்டதாரி. இவருடைய குடும்பத்தார் பழமையான முறையில், செக்கில் எண்ணெய் தயாரித்து வருகின்றனர்.இது குறித்து அவர்கள் கூறியதாவது: பொறியியல் பட்டப்படிப்பு முடித்துள்ளேன். சென்னையில் தனியார் கார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தேன். கடந்தாண்டு கொரோனா தொற்றால்,

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மணியம்பாடி கிராமத்தை சேர்ந்த அருள், 42, பொறியியல் பட்டதாரி. இவருடைய குடும்பத்தார் பழமையான முறையில், செக்கில் எண்ணெய் தயாரித்து வருகின்றனர்.


இது குறித்து அவர்கள் கூறியதாவது: பொறியியல் பட்டப்படிப்பு முடித்துள்ளேன். சென்னையில் தனியார் கார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தேன். கடந்தாண்டு கொரோனா தொற்றால், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு வேலை வாய்ப்பு இல்லாமல் இருந்தபோது, என் கிராமத்திற்கு வந்து விவசாய நிலத்தில் ஏதாவது ஒரு தொழில் செய்ய எண்ணினேன். அதன்படி, உடலுக்கு தீங்கு விளைவிக்காத மரச்செக்கு மூலம் எண்ணெய் தொழிலில், குடும்பத்தாருடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். தற்போது செக்கு எண்ணெய்க்கு மவுசு ஏற்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில், முதன் முதலில் காளைகள் பூட்டி மரச்செக்கு பாரம்பரிய முறைப்படி எண்ணெய் தயாரிப்பு தொழில் துவங்கப்பட்டுள்ளது. ஆறு அடி கொண்ட கல் நடப்பட்டு, வாகை மரம் செக்காக பயன்படுத்தப்படுகிறது. கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவை தயாரிக்கப்படுகிறது. முதலில் மணப்பாறையில் இருந்து ஒரு லட்ச ரூபாய்க்கு, ஒரு ஜோடி காங்கேயம் காளைகளை வாங்கி வந்து செக்கு இழுக்கப்பட்டு, எண்ணெய் பிழியப்படுகிறது. ஒரு நாளுக்கு, 60 லிட்டர் எண்ணெய் உற்பத்தி செய்யலாம். ஒரு லிட்டர் நல்லெண்ணெய், 360 ரூபாய்; தேங்காய் எண்ணெய், 290 ரூபாய்; கடலை எண்ணெய், 290 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சர்க்கரை நோய், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் என, அவதிப்படும் மக்கள் தற்போது இயற்கை உணவு முறைக்கு மாறி வருகின்றனர். மர செக்கை காளைகள் மூலம் மெதுவாக இயக்குவதால், எள் சூடாவதில்லை. நல்ல பக்குவத்தில் அதில் உள்ள சத்துக்கள் சிதையாமல் பாதுகாக்கப்படுகின்றன. ஆனால் இயந்திர தயாரிப்பில் எண்ணெய் வித்து பொருட்களில் உள்ள சத்துக்களையும், தயாரிப்பாளர்கள் வடிகட்டி விடுவர். இதனால் பாக்கெட் எண்ணெய், பார்க்க பளிச்சென இருக்கும். கம்பெனிகள், தங்களுக்கு என நிரந்தரமாக வைத்திருக்கும் நிறம், மணம், குணத்தை சேர்க்கின்றனர். அதனால் தான் இந்த எண்ணெய் அதிகபட்சம் மூன்று மாதங்கள் வரை மட்டுமே தாக்கு பிடிக்கிறது. ஆனால், மரச்செக்கு எண்ணெய் நிறம் குறைவாகவே இருந்தாலும், நல்ல வாசனையுடன் ஓராண்டு வரை கெட்டு போகாமல் இருக்கும். இந்த எண்ணெயில் சமைக்கும் உணவுகள், ஆரோக்கியத்தை கொடுக்கும். மரச்செக்கில் எண்ணெய் ஆட்டும்போது, எண்ணெய் சூடேறாது. வாசனையும் மாறாமல் இருக்கும். நல்ல ருசியுடன் ஓராண்டுக்கு கெட்டு போகாமல் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X