பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தை விற்பனை கும்பல் மீது நடவடிக்கை: செவிலியருக்கு கலெக்டர் பாராட்டு சான்று

Added : மே 01, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோட்டில், குழந்தை விற்பனை கும்பல் குறித்து போலீசில் புகார் செய்து நடவடிக்கை எடுத்த செவிலியருக்கு, ஈரோடு கலெக்டர் கதிரவன் பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கினார்.ஈரோடு அக்ரஹாரம் பகுதியில், சட்ட விரோதமாக குழந்தைகள் விற்பனையை சிலர் செய்து வந்தனர். கடந்த டிசம்பரில் குழந்தைகள் நலக்குழு மூலம், சைல்டு லைன் உதவி எண்:1098க்கு போன் அழைப்பு வந்தது. இதுபற்றி, திட்ட

ஈரோடு: ஈரோட்டில், குழந்தை விற்பனை கும்பல் குறித்து போலீசில் புகார் செய்து நடவடிக்கை எடுத்த செவிலியருக்கு, ஈரோடு கலெக்டர் கதிரவன் பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கினார்.


ஈரோடு அக்ரஹாரம் பகுதியில், சட்ட விரோதமாக குழந்தைகள் விற்பனையை சிலர் செய்து வந்தனர். கடந்த டிசம்பரில் குழந்தைகள் நலக்குழு மூலம், சைல்டு லைன் உதவி எண்:1098க்கு போன் அழைப்பு வந்தது. இதுபற்றி, திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீலேகா, திட்ட உறுப்பினர்கள் இணைந்து, அக்ரஹாரம் ஆரம்ப சுகதார நிலைய செவிலியர் அகிலா மூலம், சட்ட விரோத கும்பலின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்தனர். அக்கும்பலை அடையாளம் கண்டதுடன், இதுபற்றி கருங்கல்பாளையம் போலீசீல் புகார் செய்தார். இதை தொடர்ந்து அக்கும்பலை சேர்ந்த நால்வரை போலீசார் கைது செய்து, விற்பனை செய்யப்பட்ட இரு குழந்தைகளை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில், குழந்தை விற்பனை கும்பலை பிடிக்க உதவிய, ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் அகிலாவின் செயலை பாராட்டி, கலெக்டர் கதிரவன் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X