பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தொற்றை எதிர்கொள்ள மூலிகை நாற்றுக்கு குவியும் ஆர்டர்

Added : மே 01, 2021
Share
Advertisement
கோபி: கொரோனா தொற்று சூழலில், நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும், மூலிகை நாற்றுகள் கேட்டு, கோபி வேளாண் அறிவியல் நிலையத்தில் ஏராளமானோர் முன்பதிவு செய்து வருகின்றனர்.கொரோனா தொற்றால், நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் புதுமுயற்சியாக, ஈரோடு மாவட்டம், கோபி வேளாண் அறிவியல் நிலைய வளாகத்தில் மாதிரி மூலிகை நாற்று பண்ணை அமைத்துள்ளனர். இங்கு ஆடாதொடை, கற்பூரவள்ளி, நிலவேம்பு,

கோபி: கொரோனா தொற்று சூழலில், நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும், மூலிகை நாற்றுகள் கேட்டு, கோபி வேளாண் அறிவியல் நிலையத்தில் ஏராளமானோர் முன்பதிவு செய்து வருகின்றனர்.


கொரோனா தொற்றால், நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் புதுமுயற்சியாக, ஈரோடு மாவட்டம், கோபி வேளாண் அறிவியல் நிலைய வளாகத்தில் மாதிரி மூலிகை நாற்று பண்ணை அமைத்துள்ளனர். இங்கு ஆடாதொடை, கற்பூரவள்ளி, நிலவேம்பு, நெல்லிக்காய், தூதுவளை என வெவ்வேறு எதிர்ப்பு சக்தி கொண்ட, 32 வகையான மூலிகை நாற்றுகளை உற்பத்தி செய்து, விற்பனையை துவக்கியுள்ளனர். இதற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக ஈரோடு, அந்தியூர், அரச்சலூர், பள்ளிபாளையம், கோபி உள்ளிட்ட பகுதியில் இருந்து, மூலிகை நாற்றுகள் கேட்டு முன்பதிவு செய்து வருகின்றனர். இதேபோல், கவுந்தப்பாடி அருகே ஒரு அரசு பள்ளிக்கு, 40 நிலவேம்பு நாற்றுகள் கேட்டு முன்பதிவு செய்துள்ளனர். தவிர, மூலிகை தோட்டம் அமைக்க வேண்டி, கோபியை சேர்ந்த ஒரு தனியார் கல்லூரி நிர்வாகம் நாற்றுகள் கேட்டு முன்பதிவு செய்துள்ளனர். மேலும் ஈரோடு மாவட்ட அளவில், பத்து இடங்களில், முதல்நிலை செயல்விளக்க திட்டத்தின் கீழ், மாதிரி மூலிகை தோட்டம் அமைக்க, இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம், கோபி வேளாண் அறிவியல் நிலையத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X