பொது செய்தி

தமிழ்நாடு

கெலவரப்பள்ளி அணையில் இருந்து 80 கன அடி தண்ணீர் திறப்பு

Added : மே 01, 2021
Share
Advertisement
ஓசூர்: கெலவரப்பள்ளி அணைக்கு கடந்த மூன்று நாட்களாக, 150 கன அடி நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில், 80 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு கடந்த மூன்று நாட்களாக, 150 கன அடி நீர்வரத்து உள்ளது. கடந்த, 19 முதல், அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில், 80 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில்,

ஓசூர்: கெலவரப்பள்ளி அணைக்கு கடந்த மூன்று நாட்களாக, 150 கன அடி நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில், 80 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.


ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு கடந்த மூன்று நாட்களாக, 150 கன அடி நீர்வரத்து உள்ளது. கடந்த, 19 முதல், அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில், 80 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 34.11 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர், 60 கி.மீ., பயணம் செய்து, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையை அடைகிறது. ஆற்றின் குறுக்கே, 10க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் உள்ளதால், தண்ணீர் முழுவதும் கே.ஆர்.பி., அணையை சென்று சேர்வதில்லை. கடந்த, 19 முதல், கெலவரப்பள்ளி அணையில் இருந்து, 80 கன அடி நீர் திறக்கப்பட்டாலும், 12 கன அடி மட்டுமே கே.ஆர்.பி., அணைக்கு செல்கிறது. கோடை காலம் முடிந்து, ஜூலை மாதத்தில் பாசனத்திற்கு நீர் திறக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதால், கே.ஆர்.பி., அணையில் போதிய நீர் இருப்பு வைக்க வேண்டியது அவசியம். கெலவரப்பள்ளி அணையில் இருந்து வரும், 22 வரை இரண்டாம்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டியுள்ளது. கெலவரப்பள்ளி அணைக்கு கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நீர்வரத்து முற்றிலும் குறைந்துள்ளது. இதனால் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கும் போதிய நீர் செல்லாமல் உள்ளது. அதனால் கே.ஆர்.பி., அணையின் கொள்ளளவான, 52 அடியில், 39.30 அடிக்கு தான் தண்ணீர் இருப்பு உள்ளது. அணையில் உள்ள நீர் மூலம் கோடை காலத்தை சமாளித்த பின், பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பெரிய அளவில் மழை பெய்யாவிட்டால், அணைக்கு நீர்வரத்து தடைப்பட்டு விவசாயிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X