பொது செய்தி

தமிழ்நாடு

இயற்கை, சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும்: தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி

Added : மே 01, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: ''இயற்கை மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க, அனைவரும் முன்வர வேண்டும்,'' என, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பேசினார்.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில், சார்பு நீதிமன்றம் திறப்பு விழா, பாதிக்கப்பட்ட மற்றும் குழந்தை சாட்சிகளை பரிசோதிப்பதற்கான மைய கட்டடம் அடிக்கல் நாட்டு விழா, கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில்

கிருஷ்ணகிரி: ''இயற்கை மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க, அனைவரும் முன்வர வேண்டும்,'' என, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பேசினார்.


கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில், சார்பு நீதிமன்றம் திறப்பு விழா, பாதிக்கப்பட்ட மற்றும் குழந்தை சாட்சிகளை பரிசோதிப்பதற்கான மைய கட்டடம் அடிக்கல் நாட்டு விழா, கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்தது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ரமேஷ், செந்தில்குமார், ராமமூர்த்தி ஆகியோர் பேசினர். மாவட்ட முதன்மை நீதிபதி கலைமதி வரவேற்றார். நிகழ்ச்சியில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, புதிய நீதிமன்ற கட்டடத்தை சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்து, புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்து பேசியதாவது: சமுதாயத்தில், நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். மக்களை பாதுகாக்கக் கூடிய மிகப்பெரிய பொறுப்பு நம்மிடம் உள்ளது. ஆகவே நீதித்துறையில் உள்ளவர்கள் மரியாதைக்குரியவர்களாக நடந்து கொள்ள வேண்டும். தீர்ப்பு வழங்கும் போது, நடுநிலையுடன் என்ன காரணத்திற்காக தீர்ப்பு வழங்கப்பட்டது என்பதை விளக்கி தீர்ப்பளிக்க வேண்டும். இன்று உலகம் முழுவதும் பரவும் வைரசால் மக்களும், பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இயற்கை அழிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த வைரஸ் ஒரு பாடத்தை கற்பித்துள்ளது. இயற்கையையும், சுற்றுச்சூழலையும் பாதுகாத்திட வேண்டும். அதற்கு பொதுமக்கள் அனைவரும் முன்வர வேண்டும்.' இவ்வாறு அவர் பேசினார். கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, எஸ்.பி., பண்டிகங்காதர் உள்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ராஜசிம்மவர்மன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X