சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கள்ளக்காதலை கைவிட மறுத்த மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற கணவர்

Added : மே 01, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கள்ளக்காதலை கைவிட மறுத்ததால், மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கோவில் பூசாரி, போலீசில் சரண் அடைந்தார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகா பாகலூர் பிராமணர் தெரு சந்தை வீதியை சேர்ந்தவர் சென்னபசப்பா, 44. இவர், பாகலூர் பைரவர் கோவிலில் பூசாரியாக உள்ளார். இவர் மனைவி கவுரம்மா, 40. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். சென்னபசப்பாவிற்கு உதவியாளராக கர்நாடகா மாநிலம் ஹாசன்

கிருஷ்ணகிரி: கள்ளக்காதலை கைவிட மறுத்ததால், மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கோவில் பூசாரி, போலீசில் சரண் அடைந்தார்.


கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகா பாகலூர் பிராமணர் தெரு சந்தை வீதியை சேர்ந்தவர் சென்னபசப்பா, 44. இவர், பாகலூர் பைரவர் கோவிலில் பூசாரியாக உள்ளார். இவர் மனைவி கவுரம்மா, 40. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். சென்னபசப்பாவிற்கு உதவியாளராக கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டம், சாகர் கிராமத்தை சேர்ந்த மிருத்தியன் ஜெயா, 23; என்பவர் சென்னபசப்பா வீட்டில் தங்கிக் கொண்டு கோவில் பணி செய்து வந்தார். இந்நிலையில் கவுரம்மாவிற்கும், மிருத்தியன் ஜெயாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதையறிந்த சென்னபசப்பா இருவரையும் கண்டித்துள்ளார். கள்ளக்காதலை கைவிடாததால், சென்னபசப்பா தன் மனைவியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி நேற்று முன்தினம் மாலை, கவுரம்மா பிறந்தநாளை முன்னிட்டு சுவாமி கும்பிடுவதற்காக, சென்ன பசப்பா தன் மனைவியை வேப்பனஹள்ளி அடுத்த கே.என்.போடூர் கிராமத்தில் உள்ள பசவேஸ்வரா கோவிலுக்கு அழைத்து சென்றார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்கு வாதத்தில், சென்னபசப்பா துப்பட்டாவால் மனைவியின் கழுத்தை நெரித்து, கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார். ஆனாலும் கவுரம்மா இறக்காததால், கட்டையால் தலையில் அடித்து கொலை செய்தார். பின்னர் ஓசூர் டவுன் போலீசில் சரணடைந்தார். ஓசூர் போலீசார் அளித்த தகவல்படி, வேப்பனஹள்ளி போலீசார் சென்னபசப்பாவை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X