பொது செய்தி

தமிழ்நாடு

சிமென்ட், கம்பி விலை உயர்வால் பாதிப்பு: தமிழக தொழில்துறை செயலருக்கு மனு

Added : மே 01, 2021
Share
Advertisement
நாமக்கல்: 'சிமென்ட், கம்பி விலை உயர்வால், கட்டுமானப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, விவசாய முன்னேற்ற கழக நிறுவனர் செல்ல ராசாமணி, இணை நிறுவனர் பாலசுப்ரமணியன் ஆகியோர், தமிழக தொழில் துறை செயலாளருக்கு மனு அனுப்பி உள்ளனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில், நீண்டகாலமாக கட்டுமான பணிகள் தங்கு தடையின்றி நடந்து வந்தன. ஆனால்,

நாமக்கல்: 'சிமென்ட், கம்பி விலை உயர்வால், கட்டுமானப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, விவசாய முன்னேற்ற கழக நிறுவனர் செல்ல ராசாமணி, இணை நிறுவனர் பாலசுப்ரமணியன் ஆகியோர், தமிழக தொழில் துறை செயலாளருக்கு மனு அனுப்பி உள்ளனர்.


அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில், நீண்டகாலமாக கட்டுமான பணிகள் தங்கு தடையின்றி நடந்து வந்தன. ஆனால், தற்போது கட்டுமானப் பணிகள், அழிவின் விளிம்பிற்கு சென்று கொண்டிருக்கின்றன. அதற்கு காரணம், மூன்று மாதத்தில், சிமென்ட் மூட்டை ஒன்றுக்கு, 100 முதல், 150 ரூபாய் வரையிலும், கம்பி டன் ஒன்றிற்கு, 20 ஆயிரம் முதல், 25 ஆயிரம் ரூபாய் வரை விலை ஏற்றம் கண்டுள்ளது. சிமென்ட் மற்றும் கம்பி உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்கள், கடுமையான விலையை உயர்த்தி உள்ளதால், கட்டுமான பணிகள் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்கள், பொறியாளர்கள், எலக்ட்ரீஷியன்கள், கட்டுமான தொழில்களில் ஈடுபட்டுள்ள இதர தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலையை கருத்தில் கொண்டு, உடனடியாக சம்பந்தப்பட்ட சிமென்ட் ஆலை மற்றும் கட்டுமான கம்பிகள் உற்பத்தி நிறுவனங்களின் தலைவர்களை அழைத்து பேசி, விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது அமைய உள்ள அரசு, இந்த கட்டுமான தொழிலில் ஏற்பட்டுள்ள சுணக்கத்தை போக்குவதற்கு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம். நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில், கட்டுமானப் பொறியாளர்கள், மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் அனைத்து கட்சி தலைவர்களுடனும் கலந்து ஆலோசனை செய்து, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X