சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஹான்ஸ் உள்பட 71 மூட்டை பறிமுதல்: இரு வேன் பறிமுதல்; 2 டிரைவர் கைது

Added : மே 01, 2021
Share
Advertisement
மேட்டூர்: கர்நாடகாவில் இருந்து, இரு வேன்களில் கடத்தி வந்த, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 71 மூட்டை புகையிலை பொருட்களை, கொளத்தூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.மேட்டூர் அருகே, தமிழக எல்லையிலுள்ள காரைக்காடு சோதனைச்சாவடியில், நேற்று முன்தினம் இரவு, 9:30 மணிக்கு, போலீசார் வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கர்நாடகா மாநிலம், சாம்ராஜ்நகரில் இருந்து வந்த ஈச்சர் வேன், பொலிரோ

மேட்டூர்: கர்நாடகாவில் இருந்து, இரு வேன்களில் கடத்தி வந்த, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 71 மூட்டை புகையிலை பொருட்களை, கொளத்தூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.


மேட்டூர் அருகே, தமிழக எல்லையிலுள்ள காரைக்காடு சோதனைச்சாவடியில், நேற்று முன்தினம் இரவு, 9:30 மணிக்கு, போலீசார் வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கர்நாடகா மாநிலம், சாம்ராஜ்நகரில் இருந்து வந்த ஈச்சர் வேன், பொலிரோ சரக்கு வேனை, சோதனை செய்தனர். அப்போது, தமிழகத்துக்கு கடத்த முயன்ற, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மூட்டை, மூட்டையாக இருந்தன. 36 ஹான்ஸ் மூட்டைகள் உள்பட பிற வகை புகையிலை பொருட்கள் என, 71 மூட்டைகளையும், இரு வேன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், வேனை ஓட்டி வந்த, திருவண்ணாமலை மாவட்டம், வாணாபுரத்தை சேர்ந்த சுரேஷ், 36, சரக்கு வேனை ஓட்டிவந்த, தென்காசி மாவட்டம், ஆலங்குளம், காந்தி நகர் ஜேம்ஸ்ராஜா, 26, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணை குறித்து கொளத்தூர் போலீசார் கூறியதாவது: புகையிலை பொருட்கள் எங்கு செல்கிறது என்பது, டிரைவர்களுக்கு தெரியவில்லை. அவர்கள், இடைத்தரகர்களாக செயல்பட்டுள்ளனர். சாம்ராஜ்நகரில், வேனை வேறு டிரைவர், ஒரு இடத்துக்கு சென்று, பொருட்களை ஏற்றியுள்ளார். அதுபோல, ஒரு வேனை பவானிக்கும், மற்றொரு வேனை மதுரைக்கு ஓட்டிச்செல்கின்றனர். அங்கு, வேறு நபர்கள் வேன்களை ஓட்டிச்சென்று, மூட்டைகளை குறிப்பிட்ட இடத்தில் இறக்க திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிந்தது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X