சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கணவர் இறந்த சில நிமிடத்தில் மனைவியும் உயிரிழப்பு

Added : மே 01, 2021
Share
Advertisement
வாணியம்பாடி: வாணியம்பாடியில், கணவர் இறந்த சில நிமிடங்களில், மனைவியும் இறந்ததால் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கச்சேரி சாலையை சேர்ந்தவர் அண்ணாமலை, 78. இவரது மனைவி லட்சுமியம்மாள், 65. ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். அண்ணாமலை ஜவுளிக்கடை வைத்துள்ளார். கடந்த, 24ல் சைக்கிளில் சென்ற அண்ணாமலை கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டது. இதற்காக

வாணியம்பாடி: வாணியம்பாடியில், கணவர் இறந்த சில நிமிடங்களில், மனைவியும் இறந்ததால் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கச்சேரி சாலையை சேர்ந்தவர் அண்ணாமலை, 78. இவரது மனைவி லட்சுமியம்மாள், 65. ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். அண்ணாமலை ஜவுளிக்கடை வைத்துள்ளார். கடந்த, 24ல் சைக்கிளில் சென்ற அண்ணாமலை கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டது. இதற்காக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று காலை, 11:00 மணிக்கு அண்ணாமலை இறந்தார். தகவல் அறிந்து உறவினர்கள் வந்து துக்கம் விசாரித்தனர். அப்போது, அண்ணாமலை உடல் மீது சாய்ந்தபடி லட்சமியம்மாள் அழுது புரண்டார். திடீரென அழுகை நின்றதால் உறவினர்கள் அவரை தூக்கிய போது, அவரும் இறந்தது தெரிந்தது. அண்ணாமலை இறந்த, 15 நிமிடத்தில் அவரது மனைவியும் இறந்ததும் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். பின்னர், இருவரது உடல் அடக்கம் ஒன்றாக நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X