சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமியை கர்ப்பமாக்கியவர் போக்சோவில் கைது

Added : மே 01, 2021
Share
Advertisement
வந்தவாசி: வந்தவாசி அருகே, சிறுமியை கர்ப்பமாக்கியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பொன்னூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார், 23. இவர், சென்னை வண்டலூரில் கார் டிரைவராக உள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி, ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ளனர். இந்நிலையில், அடிக்கடி சொந்த ஊரான பொன்னூருக்கு வரும்போது, அப்பகுதியை சேர்ந்த, 17 வயது

வந்தவாசி: வந்தவாசி அருகே, சிறுமியை கர்ப்பமாக்கியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பொன்னூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார், 23. இவர், சென்னை வண்டலூரில் கார் டிரைவராக உள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி, ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ளனர். இந்நிலையில், அடிக்கடி சொந்த ஊரான பொன்னூருக்கு வரும்போது, அப்பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது சிறுமியிடம் ஜாலியாக இருந்துள்ளார். இதில், சிறுமி தற்போது ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ளார். இதையடுத்து சிறுமி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு விஜயகுமாரிடம் கேட்டார். அதற்கு விஜயகுமார் எனக்கு திருமணமாகி குழந்தை உள்ளது, எனவே திருமணம் செய்து கொள்ள முடியாது என கூறினார். இது குறித்து, வந்தவாசி அனைத்து மகளிர் போலீசில் சிறுமி புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி, விஜயகுமாரை போக்சோவில் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X