பொது செய்தி

இந்தியா

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி திட்டம்: 6 மாநிலங்களில் மட்டும் துவக்கம்

Updated : மே 01, 2021 | Added : மே 01, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: தடுப்பூசிகள் கையிருப்பு இல்லாததால் இன்று (மே 1) பல மாநிலங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படாது என அறிவிக்கப்பட்ட நிலையில், 6 மாநிலங்களில் மட்டும் இத்திட்டம் துவங்கியுள்ளது.இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வரும் சூழலில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கி விட்டுள்ளன. இதுவரை 45 வயதுக்கு மேற்பட்ட
CovidVaccine, SixStates, BeginVaccination, CoronaVirus, கொரோனா, தடுப்பூசி, 6 மாநிலங்கள்

புதுடில்லி: தடுப்பூசிகள் கையிருப்பு இல்லாததால் இன்று (மே 1) பல மாநிலங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படாது என அறிவிக்கப்பட்ட நிலையில், 6 மாநிலங்களில் மட்டும் இத்திட்டம் துவங்கியுள்ளது.

இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வரும் சூழலில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கி விட்டுள்ளன. இதுவரை 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில் மே 1-ம் தேதி (இன்று) முதல் 18 வயதை கடந்த அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கான முன்பதிவு சமீபத்தில் துவங்கினாலும், பல மாநிலங்களில் தடுப்பூசி கையிருப்பு இல்லை எனக்கூறி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று தடுப்பூசி போடப்படவில்லை என அறிவித்துள்ளது.


latest tamil news



இந்நிலையில், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், சத்தீஸ்கர், குஜராத் மற்றும் ஒடிசா ஆகிய 6 மாநிலங்களில் மட்டும் இன்று திட்டமிட்டப்படி 18 வயது நிரம்பியவர்களுக்கான தடுப்பூசி போடும் திட்டம் துவங்கியுள்ளது. இந்த மாநிலங்களிலும் ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே முகாம் அமைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-மே-202120:28:38 IST Report Abuse
ஆப்பு இப்பிடியே தடுப்பூசி போட்டு 2050 க்குள் எல்லோரையும் காப்பாத்திருவோம். எங்கள் திட்டமெல்லாம் தொலைநோக்கு திட்டங்கள்தான்.
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
01-மே-202118:28:01 IST Report Abuse
Loganathan Kuttuva தனியார் மருத்துவ மனைகளில் தான் அரசியல் தலைவர்கள் தடுப்பூசி போட்டுகொண்டார்கள் .உயர்குடி மக்கள் தனியார் மருத்துவ மனைகளை நாடுகிறார்கள் கட்டணம் பற்றி பொருட்படுத்தவில்லை .
Rate this:
Cancel
Ellamman - Chennai,இந்தியா
01-மே-202117:17:57 IST Report Abuse
Ellamman Optical Illusion ... இதை மட்டும் கொண்டு ஆட்சி செய்வது எப்படி என்று ஆராச்சி கட்டுரை எழுதலாம் கடந்த ஏழு வருடங்களாக இவர்கள் ஆட்சி நடத்தும் முறையை வைத்து.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X