இந்தியர்கள் அமெரிக்கா வர மே 4 முதல் தடை

Updated : மே 01, 2021 | Added : மே 01, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
வாஷிங்டன்: மே 4-ம் தேதி முதல் அமெரிக்கா வர, இந்தியர்களுக்கு அந்த நாடு தடை விதித்துள்ளது.கொரோனா தொற்றின் முதல் அலை ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்திய நிலையில், கொரோனாவின் 2வது அலை இந்தியாவை திணற வைத்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 4 லட்சத்திற்கும் மேலானவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பும் 3,500-ஐ கடந்து சென்று விட்டது.பல்வேறு

வாஷிங்டன்: மே 4-ம் தேதி முதல் அமெரிக்கா வர, இந்தியர்களுக்கு அந்த நாடு தடை விதித்துள்ளது.latest tamil newsகொரோனா தொற்றின் முதல் அலை ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்திய நிலையில், கொரோனாவின் 2வது அலை இந்தியாவை திணற வைத்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 4 லட்சத்திற்கும் மேலானவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பும் 3,500-ஐ கடந்து சென்று விட்டது.


பல்வேறு நாடுகள் அறிவுறுத்தல்


கொரோனா தாக்கம் காரணமாக பல்வேறு நாடுகள், இந்தியாவுக்கு செல்ல வேண்டாம் என தங்கள் மக்களை அறிவுறுத்தியுள்ளது. மேலும் பல நாடுகள் இந்தியாவுக்கு விமான சேவையையும் ரத்து செய்து விட்டன. ஆஸ்திரேலியா ஒருபடி மேலே போய் இந்தியாவில் இருந்து வரும் தங்கள் நாட்டினருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்து விட்டது.


latest tamil newsஇந்தியாவில் உள்ள அமெரிக்கர்கள் நாடு திரும்ப வேண்டும் எனவும் இந்திய பயணத்தை தவிர்க்க வேண்டும் என்றும் அமெரிக்கா ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தது. இந்த நிலையில் இந்தியர்கள் அமெரிக்கா வருவதற்கு தடை விதித்து அந்த நாடு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மே 4-ம் தேதி முதல் இந்த தடை உத்தரவு அமலுக்கு வரும் என்றும் அமெரிக்கர்கள் மற்றும் நிரந்தர குடியுரிமை பெற்றவர்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
01-மே-202118:46:46 IST Report Abuse
spr இந்திய மக்கள் சிலர் கொரோனா தொற்று காரணமாக இறந்தது அனுதாபத்துக்குரியதே இந்திய மக்களின் அறிவீனம் இதற்கு காரணம் அரசியல்வியாதிகளின் சுயநலம் காரணம் பல தலைவர்கள் நீதிபதிகள் அறிஞர்களின் அக்கறையின்மை காரணம் தேர்தல், திருவிழாக்கள் எல்லாவற்றையும் அனுமதித்த அரசின் பொறுப்பின்மை காரணம் ஆனாலும் இது எவரும் எதிர்பாராமல் விளைந்த ஒன்றே .மத்திய அரசு தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது எனினும் மக்கள் ஒத்துழைத்தாலன்றி இது கட்டுக்குள் வராது.கொரோனா தொற்றுக்கு மக்களின் உடலில் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது ஒன்றே பலன் தரும் உணவுக்கு கட்டுப்பாடு சித்த மருத்டுவம் முகக்கவசம் அணிதல் கும்பலைத் தவிர்த்தல் இவை அவசியம் ஆனால் உலக அளவில் தேவையில்லாமல் இந்த விஷயம் ஊதி பெரிதாக்கப்படுகிறது பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்கள் பிற நாட்டார் இறந்த பொது கவலைப்படாத ஊடகங்கள் இந்திய மக்கள் சிலர் இறந்ததை பெரிதாக்கி இந்தியாவின் மதிப்பைக் கெடுக்க முயற்சிக்கிறது.போலும் கொரோனா தொற்றை இந்தியா திறம்பட கையாண்டது என்றும் உலக நாடுகள் பலவற்றுக்கும் மருந்து தடுப்புஊசி அளித்து நல்ல பெயர் பெற்றது பலர் கண்ணை உறுத்திய ஒன்றே இதற்காகவே காத்திருந்த அமெரிக்க இப்பொழுது இதனையே காரணம் காட்டி நம்மைப் பழி வாங்குகிறது தடுப்புஊசி தயாரிக்க மூலப் பொருளை வாங்க மத்திய அரசு முன் முயற்சி எடுத்திருக்க வேண்டும் ஆனால் செய்யாமல் விட்டதற்கான பலனை அனுபவிக்கிறது
Rate this:
Cancel
Nithya - Chennai,இந்தியா
01-மே-202114:09:59 IST Report Abuse
Nithya We have to blame on us. Shame
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
01-மே-202113:33:41 IST Report Abuse
Ramesh Sargam மே மாதத்திற்குள் கட்டுக்குள் வந்தால் பயணிக்கலாமா??
Rate this:
Vijay - Houston,யூ.எஸ்.ஏ
01-மே-202119:17:40 IST Report Abuse
Vijayநீங்கள் US சிடிஸநாக இருந்தால் ஒழிய இப்போதைக்கு பயணிக்க முடியாது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X