அரசியல் செய்தி

தமிழ்நாடு

கருத்து கணிப்பை நம்ப முடியாது: சிவகங்கை காங்., எம்.பி., கார்த்தி

Added : மே 01, 2021
Share
Advertisement
சிவகங்கை: 'தமிழகத்தில் கருத்து கணிப்பு படியே தேர்தல் முடிவு இருக்கும் என முழுமையாக நம்ப முடியாது' என சிவகங்கை காங்., எம்.பி., கார்த்தி கூறினார்.சிவகங்கையில் மேலும் அவர் கூறியதாவது: சட்டசபை தேர்தல் முடிவு பற்றி வெளியான கருத்து கணிப்பு ஒரு தகவல் தான். அதை இறுதி முடிவாக எடுக்க முடியாது. இங்கு சமுதாய ரீதியாக வேறுபாடுள்ள பலதரப்பட்ட மக்கள் உள்ளனர். ஆனால் அனைத்து கருத்து

சிவகங்கை: 'தமிழகத்தில் கருத்து கணிப்பு படியே தேர்தல் முடிவு இருக்கும் என முழுமையாக நம்ப முடியாது' என சிவகங்கை காங்., எம்.பி., கார்த்தி கூறினார்.

சிவகங்கையில் மேலும் அவர் கூறியதாவது: சட்டசபை தேர்தல் முடிவு பற்றி வெளியான கருத்து கணிப்பு ஒரு தகவல் தான். அதை இறுதி முடிவாக எடுக்க முடியாது. இங்கு சமுதாய ரீதியாக வேறுபாடுள்ள பலதரப்பட்ட மக்கள் உள்ளனர். ஆனால் அனைத்து கருத்து கணிப்பும் ஒரே திசையை நோக்கி செல்வதால் தேர்தல் முடிவும் அப்படி அமையலாம். தி.மு.க., - காங்., கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.

ஓட்டுப்பதிவு இயந்திரத்தை 'ேஹக்' செய்து தவறு நிகழ்த்த வாய்ப்பில்லை. மக்கள் போட்ட ஓட்டுக்கள் அப்படியே இருக்கும். எம்.பி., தொகுதி நிதியாக ஆண்டுக்கு கிடைக்கும் ரூ.5 கோடியை 2 ஆண்டாக ரத்து செய்துவிட்டனர். அந்நிதி எங்கே போனது.மக்கள் அனைவருக்கும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும்.

தற்போது கொரோனா பரவ தேர்தல் பிரசாரம் காரணமாக இருந்தால் அதற்கு அனைத்து கட்சியினரும் பொறுப்பேற்க வேண்டும். துாத்துக்குடி 'ஸ்டெர்லைட்' ஆலை ஆக்சிஜன் உற்பத்தி செய்வதை வரவேற்கிறேன். அதேபோன்று மற்ற நிறுவனங்களையும் தயாரிக்க அனுமதித்து ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X